பஞ்ச் பேசியும் பஞ்சரான அதிமுக.. வாக்கு சதவீதம் ஓகே! ஆனா வெறும் 8 தொகுதியில் தான் டாப்..விவரம் இதோ!
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக அக்கட்சி பெற்ற வாக்குகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக அதிக வாக்குகளை பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.
லோக்சபா தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று வெளியாகின. இதில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக பல இடங்களில் 3ம் இடத்திற்கு சென்றது. பாஜக இந்த தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

இப்படி இருக்கையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகார பலம், பணத்தை வைத்து பல கட்சிகள் பிரசாரம் செய்தன. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன் என்றும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2024-ம் ஆண்டு தேர்தலில் 1% வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்றும் தோல்விக்கான காரணத்தையும், கட்சியின் தற்போதைய நிலையையும் விளக்கியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பெற்ற வாக்குகள் எவ்வளவு என்கிற விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கட்சி பலமாக இருப்பதாக கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக எடப்பாடி, குமாரபாளையம், கங்ககிரி, பரமத்திவேலூர், திருக்கோவிலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை என வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
மறுபுறம் பலம்வாய்ந்த தொகுதிகளாக கருதப்பட்ட கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெறவில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள எந்த தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகளை பெறவில்லை.
மறுபுறம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தேமுதிகவுக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதேபோல, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு, தருமபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி என 3 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பாமக மொத்தமாக 10 லோக்சபா தொகுதிகளில் களம் இறங்கியது. இதில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.
பாஜகவை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் கூட அதிக வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications