"நல்லா கதறுங்க.. மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்” - அதிமுக ரிப்ளை!
சென்னை: "மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான். ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?" என அதிமுக விமர்சித்துள்ளது. எடப்பாடி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை காப்பி என திமுக விமர்சித்த நிலையில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், "நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வை பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

எது ஒரிஜினல்? எது காப்பி?
அம்மா மருந்தகம் ஒரிஜினல் - முதல்வர் மருந்தகம் காப்பி!
அம்மா மினி கிளினிக் ஒரிஜினல் - மக்களைத் தேடி மருத்துவம் காப்பி!
தாலிக்கு தங்கம் ஒரிஜினல் - அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம்?
இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!
மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!
ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?
மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்!
எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது? திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவுபடுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?
இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. ஃபாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெரிச்சல்! நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே... இன்னும் 2 மாசம் தான்! Tic Toc Tic Toc..." எனத் தெரிவித்துள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications