Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாவிடுவாங்களோ? எதுக்கும் கையெழுத்துப் போட்ருங்க.. எடப்பாடியின் திடீர் ப்ளான்! பரபர அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கும் இந்நிலையில், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில், பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் ஆதரவோடு அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியின் நிரந்தர பொது செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர் மும்முரமாக செய்து வருகிறார். இன்னும் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியது நிரந்தர பொதுச் செயலாளர் தேர்தலுக்கான விதிகளில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் தற்போது இந்த தீர்மானங்கள் குறித்து பரிசீலனையில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை அடுத்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்ததாகவும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த முடிவினை விரைவில் அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஒரு மனதான ஒப்புதல் இன்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் கட்டாயப்படுத்தி சில நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்த நிலையில் அவர்கள் தங்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒப்புதல் இன்றி தீர்மானத்தை நிறைவேற்றியதாக ஓ.பன்னீர்செல்வம் கடிதம் வாங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நபர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கடந்த பொதுக்குழுவின் போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக இருந்தவர்களில் சிலர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றிருக்கும் நிலையில் இது பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றாலும் சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது. அவர்கள் தங்களை மிரட்டி கையெழுத்திடுவதாக கூறினால் சிக்கல் ஏற்படும் என்பதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. மேலும் தற்போது இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவி விடாமல் இருக்கும் வகையில் அவ்வாறு சென்றாலும் தங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட பொதுக்குழு நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகளிடம் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

கையெழுத்து பெற முயற்சி

கையெழுத்து பெற முயற்சி

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் அழைத்து கடிதம் மற்றும் கையெழுத்தினை எழுதி வாங்கி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தென் மாவட்ட நிர்வாகிகள் சிலரை தொடர்புகொண்டு ஓபிஎஸ் நிர்வாகிகள் கையெழுத்திட வேண்டாம் எனக் கூறி வருவதாகவும் சில நிர்வாகிகள் கையெழுத்து இடலாமா வேண்டாமா என யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+