’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக! தனுஷுக்கு ஜால்ரா போடும் மாஜிகள்! தலையில் அடித்துக் கொள்ளும் ர.ர.கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, 2 முறை அடுத்தடுத்து ஆட்சியை அமைத்த கட்சி என பல பெருமைகளை கொண்ட அதிமுக தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. பதவி சண்டையில் பல அணிகளாக அதிமுக சிதறுண்ட நிலையில், தற்போது தனுஷுக்கு ஜால்ரா போட்டு வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள். இதனால் கட்சியில் இருக்கலாமா? அல்லது வேலை வேறு வேலையை பார்க்க போய்விடலாமா? என்ற மனநிலையில் இருக்கிறோம் என புலம்புகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இருந்தவரை எஃகு கோட்டை போல இருந்தது அதிமுக என்பார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் பேப்பரை படித்தால் தான் தங்கள் பதவி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார்களாம்.

AIADMK Edappadi Palaniswami

அப்படியெல்லாம் ஒரு காலத்தில் இருந்த அதிமுக இன்று மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த அந்த கட்சி தற்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமான பிறகு ஓபிஎஸ் இடைக்கால முதல்வராக பதவி ஏற்றார். சசிகலாவுக்கு அரசின் தலைமை பதவி மீதான ஆசை ஏற்பட்ட நிலையில் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் அதற்கு தூபம் போட்டனர்.

அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆட்சியும் கட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என அறிக்கைக்கும் மேல் அறிக்கையை விட்டு அவரை உசுப்பேற்றினர் அப்போதைய அமைச்சர்களும் எம்பிக்களும். இதை அடுத்து ஓபிஎஸ்ஐ ஓரம் கட்ட.. அவர் தர்மயுத்தம் தொடங்கினார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

டிடிவி தினகரனின் தலையீடு அதிகமாக இருந்த நிலையில் அவரை ஓரங்கட்ட முடிவெடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சிக்கு எதிராகவே வாக்களித்த ஓபிஎஸ் உடன் கூட்டு சேர்ந்தார். சசிகலாவும் டிடிவி தினகரன் ஓரம் கட்டப்பட்டனர். நான்காண்டுகள் இலை மறை காயாக இருந்த மோதல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வெளிப்படையாக வெடித்தது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டார்.

அதற்குப் பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து பல முக்கிய புள்ளிகள் விலகினர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மண்ணை கவ்விய நிலையில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த எஸ் பி வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் ஒரு கோஷ்டியை சேர்த்துக்கொண்டு எடப்பாடிக்கு எதிராக முஷ்டி உயர்த்தினர்.

அதில் விஜயபாஸ்கர் அண்ட் கோ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கு எதிர்பார்த்த தோல்வியை தான் கொடுத்தது. இதை அடுத்து எடப்பாடி பதவி விலக வேண்டும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்ற முழக்கங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே சமீபத்திய அரசியல் பரபரப்பாக தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பேசிக்கொள்கின்றனர்.

அவர் வருகிறாரோ? இல்லையோ? அதிமுகவினர் விஜயை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தனுசுக்கு ஜால்ரா போடத் தொடங்கிவிட்டனர். தனுஷ் பக்கம் செல்லுங்கள் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமார். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி ஜெயலலிதா வளர்த்த கட்சி தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி என பல பெருமைகளை கொண்ட அதிமுக, இன்று விஜயை எதிர்ப்பதற்காக தனுஷுக்கு தூபம் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது என குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

போதாக் குறைக்கு பெரும்பாலான மாஜிகள் விஜய் பக்கம் தாவி விட்ட நிலையில் இருக்கும் அக்ரிகிருஷ்ணமூர்த்தி போன்றோர் எடப்பாடி பழனிச்சாமியை நீங்கள் தான் அடுத்த எம்ஜிஆர் என உசுப்பேற்றி வருகின்றனர். எக்காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமியால் எம்ஜிஆர் ஆக முடியாது. அதிமுகவை காப்பாற்ற வேண்டுமென்றால் இருக்கும் உறுப்பினர்களையும், இழந்த உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து பயணப்பட்டால் மட்டுமே 2031வது ஆண்டிலாவது அதிமுகவுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+