திமுகவுக்கு 'பி டீம்' தேவையில்லை.. மதுரையில் மக்களோடு டீ சாப்பிட்டபடி ஜெயக்குமாருக்கு கனிமொழி பதில்
சென்னை: பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதே நேரம், திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்று திமுக லோக்சபா எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
சசிகலா இன்று பெங்களூரிலிருந்து தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ஸ்டாலினை டிடிவி தினகரன் தனியாக சந்தித்ததாகவும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர், திமுகவின் பி டீமாக செயல்பட்டு அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதாவிற்கு பின்னர் சசிகலாவை அம்மா என்றார்கள். இப்போது அவரை வேறு மாதிரி பேசி வருகிறார்கள்.
தினகரனும், சசிகலாவும் திமுகவின் பி டீம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால், பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை. திமுக எளிதாக வெற்றி பெறும் என்றார்.
மேலும், மதுரை சுப்ரமணியபுரம் பகுதி டீக்கடையில் கனிமொழி மக்களை சந்தித்தார். அங்கேயே டீ வாங்கி பருகினார்.












Click it and Unblock the Notifications