அதிமுகவுக்கு வாக்களிக்க ஆதிதிராவிடர்கள்... ஆனா வழிகாட்டும் குழுவில் இடம் இல்லை... எம்பி ரவிகுமார்!!
சென்னை: அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும் தான் ஆதி திராவிடர்கள், வழிகாட்டும் குழுவில் இடம் இல்லையா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் தனது ட்விட்டர் பதிவில், ''அதிமுகவுக்கு வாக்களித்த ஆதிதிராவிடர்கள் புலம்புகிறார்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவின் வங்கியில் மிக முக்கியமான ஒரு சமூகமாக இருப்பது ஆதி திராவிடர் சமூகம், ஆனால், இப்போது அதிமுக அமைத்துள்ள குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம் பெறவில்லையே ஏன்? என அதிமுகவைச் சார்ந்தவர்களே எம்மிடத்தில் புலம்புகின்றனர்.

அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தானா நாங்கள்? வழிகாட்டுதல் குழுவில் எங்களுக்கு இடம் இல்லையா?இந்தக் கேள்வியை அவர்களால் கட்சியிலிருந்தே எழுப்ப இயலாமல், எம்மிடத்தில் கூறி வருந்துகின்றனர். இதற்கு அதிமுக என்ன பதில் சொல்லும்'' என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி , எஸ்பி வேலுமணி , ஜெயக்குமார், சி.வி சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம் பி கோபால கிருஷ்ணன் , முன்னாள் அமைச்சர் மோகன் , சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓபிஎஸ் சார்பில் 5 பேரும், ஈபிஎஸ் சார்பில் 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவுக்கு பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.
அதிமுகவுக்கு வாக்களிக்க மட்டும்தான் ஆதி திராவிடர்கள், வழிகாட்டும் குழுவில் இடம் இல்லையா? pic.twitter.com/V1yiZKa4TJ
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 7, 2020
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications