களமிறங்கியது அதிமுக.. திமுக பிரச்சாரத்திற்கு இடையே அதிரடி மீட்டிங்..தேர்தல் குறித்து முக்கிய முடிவு?
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2021 சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி உள்ளது. சசிகலா விடுதலை, மு. க அழகிரி கூட்டம், உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை, திமுக கூட்டம் என்று அடுத்தடுத்து கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளது.
ஒரு பக்கம் பாஜக கட்சி வேல் யாத்திரையை தொடங்கி தீவிரமாக நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக கட்சி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

திமுக
திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். ஆனால் இவர் பிரச்சாரத்தை தொடங்கி சில நிமிடங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தடையை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக எப்படி
திமுக ஒரு பக்கம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜகவும் வேல்யாத்திரை மூலம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை பெரிய அளவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே வகுக்க தொடங்கி உள்ளது தெளிவாகிறது.

கூட்டம்
இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டம், அதிமுக அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

தேர்தல்
தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும், பல்வேறு அரசியல் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் வியூகங்கள் குறித்து சென்னையில் நடக்கும் இந்த மீட்டிங்கில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தேர்தல் குறித்து பலவேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாளை தமிழகத்திற்கு அமித் ஷா வர உள்ள நிலையில் இன்று இந்த கூட்டத்தின் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications