அதிமுக ரொம்ப முக்கியம்.. விட்றாதீங்க.. மோடிக்கு போன மெசேஜ்.. பாஜகவிலேயே 2 டீமாமே? அப்படியா?
மோடியிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜகவில் இரண்டு டீம் உள்ளது என்று கூறி உள்ளார்.
சென்னை: சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முக்கியமான தலைவர் ஒருவர் அதிமுக எவ்வளவு முக்கியம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்து இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் கடந்த சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்தது.
அதன்படி நேற்று முதல்நாள் நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். மிகவும் காட்டமான கருத்துக்களை அண்ணாமலை வைத்ததாக கூறப்படுகிறது.

என்ன சொன்னார் அண்ணாமலை
அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

எனக்கு தெரியும்
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

தலைவர்
இதனால் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி முறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முக்கியமான தலைவர் ஒருவர் அதிமுக எவ்வளவு முக்கியம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்து இருக்கிறாராம். அந்த தமிழ்நாடு அரசியல் தலைவர் மோடிக்கு நெருக்கமானவர். இப்போது எம்பி, எம்எல்ஏவாக இல்லை என்றாலும் மோடி இவரை அதிகம் மதிக்கிறாராம். கடந்த 1 வருடத்தில் மட்டும் மோடியை இவர் 3 முறை நேரில் பார்த்து பர்சனலாக பேசி இருக்கிறாராம்.

என்ன சொன்னார்?
இந்த நிலையில்தான் மோடியிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜகவில் இரண்டு டீம் உள்ளது. ஒரு டீம் அதிமுக கூட்டணி வேண்டும் என்று சொல்கிறது. இன்னொரு டீம் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்கிறது. இந்த இரண்டு டீம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதில் நான் கருத்து சொல்லவில்லை. ஆனால் என்னுடைய கருத்துப்படி அதிமுக கூட்டணி பாஜகவிற்கு தேவை. பாஜகவில் சிலர்.. 2026 தேர்தலை குறி வைக்கிறார்கள். ஆனால் நாம் 2024 தேர்தலை குறி வைக்க வேண்டும் .

அமைச்சர்
2024 தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் செல்ல வேண்டும். அவர்கள் அமைச்சர்கள் ஆக வேண்டும். அப்போதுதான் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்க முடியும். அதற்கான பணிகளை செய்ய வேண்டும். 2024ல் எம்பிக்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி மிக அவசியம். அதிமுக கூட்டணி இல்லாமல் மூன்றாவது இடத்தை பிடிப்பது கூட சிரமம். ஆனால் எம்பிக்கள் அமைச்சர்கள் ஆன பின் கட்சியை வேகமாக வளர்க்க முடியும், என்று மோடியிடம் ஆலோசனை அளித்து இருக்கிறாராம். இதில் பாஜக மேலிடம் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications