அப்படியே ஜெ.வாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. கற்ற வித்தைகளை தேர்தல் அறிக்கையில் இறக்க அதிரடி வியூகம்!
சென்னை: எல்இடி டிவி, ஆண்ட்ராய்டு போன், டேப்லெட் என பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் தயாராகி வருகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை.
பொதுவாக 2006 ஆம் ஆண்டு வரை தேர்தல் அறிக்கை குறித்த யாரும் பெரிதாக கண்டு கொண்டதில்லை. ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கை அந்த 2006ஆம் ஆண்டு மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் ரூ 1 க்கு ரேஷன் அரிசி, இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி, 2 ஏக்கர் இலவச நிலம் உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்தன. அந்த ஆண்டு திமுக வெற்றி பெற தேர்தல் அறிக்கையும் ஒரு காரணமாக இருந்தது.

ஜெயலலிதா
இதையடுத்து இதே பார்முலாவை ஜெயலலிதாவும் பின்பற்ற தொடங்கினார். வழக்கமாக முதலில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும், அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஆனால் 2011ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஃபேன்
அதில் இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதை செயல்படுத்தியும் உள்ளார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார். அம்மா உணவகத்தில் மலிவு விலையில் உணவு உள்ளிட்ட திட்டங்களால் அடுத்த முறையும் அதிமுக ஆட்சி அமைந்தது.

சட்டசபை தேர்தல்
எனவே 2006ஆம் ஆண்டு தேர்தல் முதல் கதாநாயகன் என்றால் அது தேர்தல் அறிக்கைதான். தேசிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்காக எத்தனை தேர்தல் அறிக்கைகளை தயாரித்தாலும் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையே அனைவரையும் கவர்கிறது. அது போன்றதொரு சூப்பரான ஐட்டங்களை இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் புகுத்த எடப்பாடியார் திட்டமிட்டுள்ளார்.

வாஷிங் மெஷின்
இந்த முறை வறுமைக் கோட்டிற்கு உள்ளவர்களுக்கு எல்இடி டிவி அல்லது வாஷிங் மெஷின், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், செல்போன், டேப்லெட் உள்ளிட்டவற்றை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது கிட்டதட்ட தயார் நிலையில் இருந்து வரும் இந்த அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா
கருணாநிதியிடம் ஜெயலலிதா கற்ற தேர்தல் அறிக்கை வித்தையை முழுவதுமாக இறக்க எடப்பாடியார் முடிவு செய்து விட்டார். அது போல் திமுகவுக்கு பிறகு தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடும் ஸ்டைலும் ஜெயலலிதாவினுடையதுதான். அதையும் இந்த தேர்தலில் பின்பற்ற எடப்பாடியார் முடிவு செய்துள்ளாராம்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications