அதிமுக உடன் பாஜக கூட்டணியா?.. வந்து விழுந்த கேள்வி.. அண்ணாமலை சொன்ன பதில் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக உடன் இதுவரைக்கும் லோக்சபா தேர்தல் குறித்து பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று கூறியுள்ளார். மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.

லோக்சபா தேர்தலுக்கு பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாஜகவில் வேட்பாளர்களை தயார் செய்ய ஆரம்பித்து விட்டது பாஜக. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து பேசினார்.

AIADMK joins BJP alliance in Lok sabha election 2024 what says Annamalai

லோக்சபா தேர்தலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் காத்து கொண்டிருப்பது தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் வரலாம் எனவே நமக்கு காலம் குறைவாக உள்ளது. மிக கடுமையான உழைப்பை இந்த லோக்சபா தேர்தலுக்கு தர தயாராக இருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காக மாநில அரசை எதிர்த்து நாம் நடத்திய பல போராட்டத்திற்காக நம் தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் நடத்திக் கொண்டே இருக்கிறோம்.

சேவை செய்வது தான் நமது கட்சியின் அடித்தளம் என்பதால் தொடர்ந்து சேவை செய்து கொண்டே இருக்கிறோம். 2024 லோக்சபா தேர்தலை பொருத்தவரை நாமும் தயாராக இருக்கிறோம், மக்களும் தயாராக இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று பாஜக 183 தொகுதிகளுக்கு சென்று மக்களை நேரடியாக பார்த்து உள்ளது. எந்த கட்சியும் இதுபோன்று செய்தது இல்லை.

என் மண் என் மக்கள் யாத்திரையில் பலதரப்பு மக்களை சந்தித்துள்ளோம். 200வது தொகுதி சென்னையில் 11 ஆம் தேதி நடைபெறும். யாத்திரையில் காலையிலிருந்து இரவு வரை பலதரப்பட்ட மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறோம். லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படப்போகிறது. ஒட்டகத்தின் முதுகில் சுமை ஏற ஏற ஓரளவு தாங்கும், ஒரு கட்டத்திற்கு பிறகு தாங்காது.

தமிழகத்தின் நிலைமை ஊழல் ஆட்சி, சாதி ஆட்சி, குடும்ப ஆட்சி, அடாவடித்தனம் திராவிட அரசியல் இது போன்று தமிழக மக்கள் மீது சுமையாக பாரமாக ஏற்றி வைத்து இருக்கின்றனர். தமிழக மக்கள் விரத்தியின் விளிம்பில் இருக்கின்றார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சம் ஊழல் இருக்கும் பொழுது தங்களுடைய குறைகளை மக்கள் யாரிடம் கொண்டு செல்வார்கள். மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டலில் அமரக்கூடிய தகுதி உடையவர் பிரதமர் மோடி என மக்களுக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, '2024 நாடாளுமன்ற தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிமனையை திறந்துள்ளோம். வரும் பிப்வரி 11ஆம் தேதி என் மக்கள் என் மக்கள் யாத்திரையின் 200ஆவது தொகுதியாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளோம். 'என் மண் என் மக்கள்' யாத்திரை பிப்ரவரி 25ஆம் தேதி பல்லடத்தில் நிறைவடைவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் அவரது தலைமையில் எழுச்சி மிக்க மாநாடு நடத்தப்படும்.

கோவை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி வரவில்லை. எனவே பிரதமர் செல்லாமல் இருக்கக்கூடிய புதிய பகுதியான பல்லடத்திற்கு பிரதமரை அழைத்துச் செல்ல வேண்டும் என இதனை ஏற்பாடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகளுக்கும் பலம், பலவீனம் இருக்கும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்பது எளிதான ஒன்றல்ல, கடினமான ஒன்று என்று அண்ணாமலை கூறினார்.

பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, யாரெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம். இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும். அதிமுக உடன் கூட்டணி பற்றி இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறினார். அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை என்றும் அண்ணாமலை கூறினார். அதே நேரத்தில் சுதாகர் ரெட்டியோ, தேர்தல் கூட்டணி பற்றி பாஜக தலைமை உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+