திமுக - அதிமுக கூட்டணி.. கேப்பையில் நெய் வடிதுனு சொன்னா.. கேட்பவனுக்கு அறிவு வேண்டும்! விளாசிய மாஜி
சென்னை: இன்றைய நிலை என்ன? சிவி சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி இப்படி முக்கியமான தலைவர்கள் பறந்து போய் விஜய்க்கு ஆதரவு கொடுக்கின்றனர், மாபெரும் தவறை எடப்பாடி பழனிச்சாமி செய்தது போல், திமுகவுடன் இணைந்து முதலமைச்சர் ஆவார் என்று கூறினால் "கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறினால் கேட்பவனுக்கு அறிவு வேண்டும் என விளாசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது," பழனிக்கு ஆட்டோவில் வந்த நிர்வாக இடம், கூட்டத்திற்கு ஆட்டோவில் வராதீர்கள் விருப்பாச்சி மேட்டில் ஆட்டோ தூக்கி விட்டால் என்ன செய்வீர்கள்? பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என நகைச்சுவையாக தெரிவித்தார்.
ஒரு சங்கத்திற்கு ஒரு நபரின் பெயரை மட்டுமே சொல்ல முடியும் என் பெயர் சொல்லவில்லை, உன் பெயர் சொல்லவில்லை, மச்சினன் பெயரை சொல்லவில்லை, கொழுந்தியா பெயரை சொல்லவில்லை என கூறக்கூடாது. கூட்டத்திலிருந்து வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் பெயரை சொல்வதை நிறுத்திவிட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என நிர்வாகி ஒருவர் கூறினார். புத்திமதி கூறக்கூடாது. அனைவரின் பெயரை சொல்லிவிட்டு தான் பேச முடியும்.
உங்களைக் கூட்டி வந்தவர் பல தலைவர்கள்தான் அவர்கள் பெயரை கூற வேண்டும். மனைவி சாப்பாடு செய்து வைத்திருப்பார் என்பதற்காக எங்களைப் போட்டுக் கொல்லாதே என தெரிவித்தார். நாங்கள் குண்டு விளையாட வரவில்லை. கருத்துக்கள் சொல்ல வந்துள்ளோம் கேட்டுக்கொள். இப்படி கூட்டத்தில் குழப்பம் செய்யாதே. இன்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இன்று தொழிற்சங்க தலைவர்களை ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி கட்சி நிலை எப்படி இருக்கிறது. பலர் அங்கு போனார்கள் இங்கு போனார்கள் என செய்தி வருகிறது திண்டுக்கல் மாவட்டத்தின் தகவலை ரகசியமாக தெரிந்து கொள்வதற்கு வந்துள்ளனர்.
எம்ஜிஆர் உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் என்னவென்று என் எஸ் கிருஷ்ணனிடம் கேட்கிறார். அவர் கத்தி கோடாரி என கூறுகிறார். தறி கெட்டுப் போன நயவஞ்சகர்கள் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கூறினார். எம்ஜிஆர் போட்ட பிச்சையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவர் கருணாநிதி 1970 முதல் 73 வரை எங்கு பார்த்தாலும் லஞ்சம், கொள்ளை அதனை முதலில் தட்டி கேட்டவர் எம்ஜிஆர்.
அதன் 1973ல் பின்பு எம்ஜிஆரை நம்பி மக்கள் ஓட்டு போட்டனர். திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கின்றனர். கட்சி அப்போது தலைகீழாக மாறுகிறது. தற்போது எப்படி நடிகர் வெற்றி பெற்றவுடன் அனைவரும் அங்கு செல்கிறார்கள் பழைய நினைவுகளுக்காக கூறுகிறேன். 1977, 1980, 1984 என மூன்று தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராகிறார்.
1980ல் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் எம்ஜிஆர் வெற்றி பெறுகிறார் கருணாநிதி இந்திரா காந்தி ஆகியோர் 38 இடங்களில் வெற்றி பெறுகின்றனர். அப்போது கருணாநிதி, இந்திரா காந்தியிடம் சென்று எம்.ஜி.ஆர் மரியாதை போய்விட்டது. ஆட்சியை கவிழ்த்து விடுங்கள் என கூறுகிறார். அதன்படி இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியை கலைத்து விடுகிறார்கள். அப்போது 134 இடங்களில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் தனி பெரும்பான்மையில் இருந்து வருகிறார். அதன் பின்பு 6 மாதத்தில் தேர்தல் வருகிறது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை எம்ஜிஆர் பிரச்சாரத்தின் போது எனக்கும் கருணாநிதிக்கும் போட்டி. நான் நல்லவன் என்றால் எனக்கு ஓட்டு போடுங்கள். நான் கெட்டவன் என்றால் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் நன்றி வணக்கம் என 5 நிமிடம் மட்டுமே பேசினார். 180 இடங்களில் வெற்றி பெற்றார். இது சரித்திரம்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் அரசியல் மாறும். இன்றைய நிலை என்ன? சிவி சண்முகம், விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி இப்படி முக்கியமான தலைவர்கள் பறந்து போய் விஜய்க்கு ஆதரவு கொடுக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால்தான் தனி சுதந்திரம் கிடைக்கும். 32 நபர்கள் இருந்தால் தான் ஓட்டு போடும் அதிகாரம் கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமி கொறடா அமைப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
அந்த 25 பேர் சட்டசபையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆதரவு விஜய்க்கு வழங்குகின்றனர். எடப்பாடி சட்டப்படி நடவடிக்கை தொடங்கினார் அதற்கு பயந்து எங்களை மன்னித்து விடுங்கள், தெரியாமல் தவறு செய்து விடுகிறோம் என்று கூறி சிவி சண்முகம் வேலுமணி விஜயபாஸ்கர் மற்ற தலைவர்கள் அனைத்து பெரும் மன்னிப்பு கேட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மன்னிப்பு கொடுத்தார். திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன் அவர்கள், பழனி எம்எல்ஏ ரவி மனோகரன் இரண்டு பேரும் அவர்கள் கூட உள்ளனர்.
திண்டுக்கல்லில் தற்போது தொழிற்சங்க கூட்டம் நடைபெறுகிறது. நத்தம் எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் முன்னாள் மேயர் மருதராஜ் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. இருவருக்கும் வீட்டில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. மணி ஆகிறது தற்போது வரை அவர்கள் வரவில்லை. இதனை பொதுச்செயலாளர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
மந்திரி பதவி கிடைக்கும் என்பதற்காக சென்றவர்கள், மாபெரும் தவறை எடப்பாடி பழனிச்சாமி செய்தது போல் திமுகவுடன் இணைந்த முதலமைச்சர் ஆவார் என்று கூறினால் "கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறினால் கேட்பவனுக்கு அறிவு வேண்டும்" எவனாவது அப்படி பேசுவார்களா? ஸ்டாலினிடம் சென்று எடப்பாடி பழனிச்சாமி என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று கூறுவாரா? அவன் தான் ஏற்றுக் கொள்வானா? இதைக் கூறி வெளியே வந்து விட்டோம் என கூறுகின்றனர். எலக்சன் கமிஷனில் இருந்து விலகிய அனைத்து எம்எல்ஏ-வுக்கும் எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதற்கு என்ன காரணம்? குதிரை பேரம் பல கோடிகள் வாங்கி உள்ளார்கள். அப்படி என்ன குற்றச்சாட்டை கவர்னரிடம் கூறியுள்ளோம். சட்டம் தன் கடமையைச் செய்யும். பல கோடிகள் வெளியே வருவது 30 கோடி, ஆனால் 100 கோடி 50 கோடி வாங்கியுள்ளனர் இதை செய்ததால் ராஜினாமா செய்துள்ளனர். அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் எம் எல் ஏ சீட்டு வாங்கிவிடுவார்களாம். என்னடா இது ஊரா? நாடா? எதுவுமே புரியவில்லை. இவர் சொன்னவுடன் அனைவரும் மீண்டும் ஓட்டு போடுவார்களாம்? இவர்கள் அனைவரும் மந்திரி ஆவார்களாம்? அப்போதுதான் புரட்சி எழும்.
அதிமுக ரத்தத்தை சிந்தி இவர்களை எம்எல்ஏ ஆக்கியுள்ளது இவர்கள் ராஜினாமா செய்வார்களாம்? அனைவரும் ஓட்டு போட்டு மந்திரி ஆக்குவார்களாம். இவர்கள் எந்த தொகுதியில் நின்றாலும் கையில் என்ன கிடைத்தாலும் எடுத்து அடியுங்கள். அவர்களை வெற்றி பெற விடக்கூடாது. நன்றி கெட்ட நாய்கள்...
1972 முதல் நத்தம் விஸ்வநாதன் முன்னாள் மேயர் வரதராஜ் மற்றும் நான் கட்சியில் இருந்து வருகிறோம். எனக்கு பொருளாளர் விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் இருந்தார். நாங்கள் மூவரும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தயவால் வளமாக இருக்கிறோம். எங்கள் மூன்று நபர்களுக்கும் எந்த குறையும் கிடையாது மற்றவர்கள் கதை வேறு நாங்கள் பதவியில் இருக்கோம் எங்களுக்கு என்ன இருக்கிறது.
எனது மகன் விஜய் கட்சிக்கு சென்று அதை தடுக்கவில்லை என்றால் நான் ஆம்பளையா? (முன்னாள் மேயர் மருதராஜ் குறித்து பேச்சு) எதற்கு வேஷ்டி, எதற்கு சட்டை வீசி எறியுங்கள். மருதராஜ் மகன் 10 நபர்களை கூட்டிக்கொண்டு த.வெ.க அலுவலகம் சென்று புகைப்படம் எடுக்கிறார் என்றால் தெய்வமே நீ தான் கேட்க வேண்டும்.
நீங்கள் வளர வேண்டும் உங்கள் குடும்பம் வளர வேண்டும் என்றால் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். யாரோ வேறு கட்சிக்கு செல்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஏன் செல்கிறீர்கள்? உங்களுக்கு என்ன கேடு. கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கூறினால் என்ன அர்த்தம். பொதுமக்களே கவுண்டமணி சொல்வது போல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களை எல்லாம் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குள்ளநரி வேலை செய்பவர்களை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
எச்சில் மாதிரி காரி துப்புவார்கள் இதெல்லாம் வாழ்க்கையா என்று. இந்தக் கட்சியை காட்டி கொடுத்து வெளியே சென்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். இந்த துரோகத்திற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தலில் நிற்க சட்டப்படி அனுமதிக்க மாட்டார்கள்.
கரூர்-க்கு சென்ற 41 நபர்களுக்கு பணி கொடுத்துள்ளார் மகிழ்ச்சி. 800 கோடி, 1000 கோடி, 10,000 கோடி வைத்துள்ள நடிகருக்கு என்ன பிரச்சனை?
சொந்த செலவில் பணம் கொடுத்தால் அனைவரும் பாராட்டுவார்கள். ஊரான் விட்டு நெய் என் பொண்டாட்டி கை என்று சொல்லி அரசாங்க பணத்தை எடுத்துக் கொடுத்தால் இதெல்லாம் வாழ்க்கையா? இப்படி எல்லாம் வாழலாமா? என்ன கேடு. ஒன்றுமே இல்லை என்றால் அரசாங்கத்திடமிருந்து கொடுங்கள். கோடிக்கணக்கில் பணம் உள்ளது.
டாஸ்மார்க் தயார் செய்யும் நிறுவனங்கள் ஜெகத் ரட்சகன், டி.ஆர்.பாலு, சசிகலா ஆகியோர் பாட்டில் விலையை உயர்த்துங்கள் என முதலமைச்சரிடம் கூறுகிறார்கள். சரி என்று கூறிவிட்டு மூன்றாவது நாள் 2000 கோடி சென்று உள்ளது என செய்தியில் வந்துள்ளது. நான் சொன்னேன் என்று என் மீது வழக்கு போட்டு விடாதீர்கள். அனைத்து பத்திரிக்கையிலும் செய்தி வந்துள்ளது.
இது உண்மையாக இருந்தால் லஞ்சம் வாங்க மாட்டோம் லஞ்சம் வாங்க விடமாட்டோம் என்று பேசுகிற தவெக முதலாளி விஜய் அவர்கள் தயவுசெய்து நிரூபிக்க வேண்டும். திண்டுக்கல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிள்ளைக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் என சென்றவரிடம் பத்திரங்கள் சரியில்லை எனக் கூறி அனுப்பியுள்ளனர். பணம் கொடுத்து வேலையை முடியுங்கள் என கூறினேன்.
நேரடியாக பணம் வாங்க மாட்டார்கள் என தெரிவித்தனர். பத்திரம் எழுதும் நபர்களை பிடியுங்கள் எனக் கூறினேன். ரூ 65000 வாங்கிக்கொண்டு வேலையை முடித்துக் கொடுத்துள்ளனர். இது சத்தியம் எனது பிள்ளைகள் மீது ஆணை. லஞ்சம் வாங்க மாட்டோம் என நடிக்கின்றனர். முதலில் நேரடியாக மந்திரியிடம் லஞ்சம் கொடுத்து வந்தனர். தற்போது PAவிடம் கொடுக்க வேண்டி உள்ளது. அனைத்து இடங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
தாசில்தார் அலுவலகம் உட்பட பல இடங்களுக்கு வெளியே செல்லும் பொழுது தான் உண்மை வெளிவரும். இது யோக்கியமான ஆட்சி என முதலமைச்சர் வெளியில் நடிக்கின்றனர். அது தவறு நம்பாதீர்கள். பேரன், பேத்தி சொன்னார்கள் என ஓட்டு போட்டதால் நாசமாக போய்விட்டது. இனி மீண்டும் எழ வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் புரட்சி செய்தோம் என விஜய் பேசுகிறார். அந்தப் புரட்சி உண்மையானால் அதே பணம் கொடுக்காமல் நாமும் ஓட்டு கேட்போம். என்னதான் நடக்கிறது என பார்ப்போம். இது பெரிய ஏமாற்று வேலையாக இருக்கிறது. திமுக, அதிமுக தான் ஆட்சியில் வந்து கொண்டே இருப்போம். தற்போது மூன்றாவதாக ஒருவர் பாய்கிறார்கள் என்று சொன்னால். யாருக்குத் தெரியும் என ஓட்டு போட்டது தற்போது இப்படி ஆகிவிட்டது. இனி எச்சரிக்கையாக இருப்போம்.
நமக்கு ஓட்டு போடும் மக்களை வீடு வீடாக சென்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள் அதற்காக தான் இந்த நிகழ்ச்சி. போண்டா வடை சாப்பிடுவதற்காக இந்த நிகழ்ச்சி இல்லை. மன்னிப்பு கேட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து விட்டோம். மாவட்ட செயலாளர் கேட்கின்றனர். அதை நீங்கள் சொல்லாதீர்கள் மறுபடியும் வாங்க நியாயமான பதவி கொடுப்பார்கள்.
நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் வேலுமணிக்கு துணை பொதுச் செயலாளர் மற்றவர்களுக்கு அமைப்புச் செயலாளர் இதெல்லாம் ரோட்டில் செல்கின்ற பதவியா? அமைப்புச் செயலாளர் என்றால் எவ்வளவு பெரிய வேலை கட்சியின் முக்கியமான பதவி அது இவர்களுக்கு வேண்டாம் என்று சொன்னால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சிவி சண்முகம் பொதுக்குழுவை கூட்டு உன்னது ஆண்மையை காட்டு என கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆண்மையை காட்டியதால் தான் மிதுன் என்ற மகனை வைத்துள்ளார். பொதுக்குழுவை கூட்டினால் என்ன செய்வார்கள். தலைவர், செயலாளர், பொருளாளர் என 5 பேர் பேசுவார்கள் அவ்வளவுதான். தற்போது சென்ற விளக்கெண்ணைகளை பற்றி கவலைப்படாதீர்கள். கட்சியை வைத்துக் கொள்ளையடித்தவர்கள்.
நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் மேயர் மருதராஜ் வந்து எடப்பாடி பழனிச்சாமி தவறு என கூறட்டும் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் நிச்சயமாக கொல்லும். நம்மை விட்டு சென்றவர்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தார்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை குறை சொல்லிவிட்டு செல்லும்பொழுது எப்படி இருக்கிறார்கள். அனைவர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது.
ஜெயலலிதா அவர்கள் என்ன மரியாதை கொடுத்தார்களோ அதே மரியாதையை எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது வரை கொடுத்து வருகிறார். வரும் 30ஆம் தேதி மாவட்ட கூட்டங்கள் அனைத்தும் முடிந்த பின்பு சவுக்கடி சாட்டையை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி வீசப் போகிறார். அதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எம்ஜிஆர் வீசிய சாட்டை" என்றார்.















Click it and Unblock the Notifications