ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!
தூத்துக்குடி: திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம் - அதன் பிறகு அவங்க அவங்க தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கையாக இருக்கிறது. சகோதரர் விஜய் கட்சி தொடங்கியது முதல் அதைத்தான் கூறி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் லைட்டர் பிரச்சனை மற்றும் மெழுகு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

கடம்பூர் ராஜூ
பிரச்சனை தொடர்பாக விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக த. வெ. க தலைவர் விஜய் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். வழக்கமான நடைமுறைதான். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தப்படுத்துவது சரியாக இருக்காது. தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைதியாக இருக்கிறது என அர்த்தம் இல்லை.
திமுக கூட்டணி
திமுக கூட்டணி அதைவிட அமைதியாக இருக்கிறது. திமுக கூட்டணி ஏற்கனவே இருக்கிற கூட்டணி. நாங்கள் கூட நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து போட்டியிடும் தற்போது இணைந்திருக்கும் புதிய கூட்டணி. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என தொடர்ந்து ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் திமுக கூட்டணியிலேயே தொகுதி இன்னும் பிரிக்க முடியவில்லை. காங்கிரஸ்தான் இறுதியாக அவர்கள் கூட்டணியில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி
அதற்கு முன்பாகவே நிறைய கட்சிகளுடன் ஒப்பந்தம் உறுதி செய்தனர். அந்தக் கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகள் தான் ஒற்றை இலக்கத்தில் சீட்டு கொடுக்கப் போவதாக சொல்கின்றனர். அதில் கூட மதிமுக மாறுபட்ட கருத்தோடு இன்று உயர் மட்ட குழு கூட்டம் போடுவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு என்ன நிலைமையோ தெரியவில்லை பாவம். எத்தனை சீட்டு கேட்டார்கள் எத்தனை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சரியில்லை என்று கூறியுள்ளனர்
தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்றும், அதிமுக தனி பெரும்பான்மையாக வெற்றி பெறும். எடப்பாடி ஜி தான் முதல்வர் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெளிவாக கூறியுள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கையாக இருக்கிறது. சகோதரர் விஜய் கட்சி தொடங்கியது முதல் அதைத்தான் கூறி வருகிறார். தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்று சொன்னது மட்டுமின்றி அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் அதை மையப்படுத்தி தான் பிரச்சாரம் செய்கிறார்.
விஜய் பாஜக கூட்டணி
எங்களைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்த எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சரியாக இருக்கும் என்பது எங்கள் எண்ணம். அதன் பிறகு அவங்க அவங்க தான் முடிவு செய்ய வேண்டும். ராமதாஸ் சசிகலா சந்திப்பு குறித்து அவர்கள்தான் அதைக் கூற வேண்டும். உரிய சந்திப்பு குறித்து வெளியில் ஏதாவது தெரிவித்திருந்தால் அது பற்றி கருத்து கூறலாம். சந்திப்பின் சாராம்சம் வெளிவந்தால் பதில் கூறலாம். யூகமாக கூற முடியாது" என்றார்.
-
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி -
தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக












Click it and Unblock the Notifications