அதிமுகவை ஆக்ரோஷமாக்கிய சீமான்! தலைமை ஒரு வார்த்தை சொன்னா கதி என்னாகும் தெரியுமா? கொதித்த கோவை சத்யன்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு அதிமுகவில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. சீமானை ஒருமையில் பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்.
அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினரின் பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில், மெரினா கடற்கரையில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்திருப்பது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார் சீமான்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமான் பேச்சுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வாயிலாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், "ஜெயலலிதா எங்களுக்கு கடவுள். ஒருவர், இருவர் என்றில்லாமல் கோடிக்கணக்கான பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர். சீமான் போல நாங்கள் ஆமைக்கறி என கதை விட்டு கோடிகளில் சம்பாதிப்பவர்கள் அல்ல. மைக் கிடைக்கும் போதெல்லாம் கதை விட்டு பலரின் வயிற்றில் அடித்து கோடிகளில் புரள்பவர்கள் அல்ல நாங்கள்.
சீமான் போன்று தரம் தாழ்ந்து பேசுவதற்கு எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு மட்டும் தான் வாய் இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த இயக்கம் என பெயர் வாங்கிய இயக்கம். தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடன் இருக்கிறோம். தலைமையிடம் இருந்து ஒரு வார்த்தை வந்தால் என்ன கதி ஆவாய் என்று எனக்கே தெரியாது" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications