”சாதி”யே அடிப்படை.. எம்எல்ஏக்கள் அவர் கண்ட்ரோல்! பழனிசாமிக்கு எதிராக முனுசாமி சதி -பொன்னையன் ஆடியோ
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் சாதி அடிப்படையில் பிரிந்து கிடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு வெறும் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாகவும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தொடர்ந்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னையன் ஆடியோ
எடப்பாடி பழனிசாமி ஒரு வழியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுக்குழு நிகழ்வுகள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையனின் தொலைபேசி உரையாடலை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகி எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பணத்துக்காகவே தலைவர்கள்
கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் பொன்னையன், "தொண்டர்கள் இரட்டை இலை பின்னால் நிற்கிறார்கள். தலைவர்கள் பணத்துக்காக நிற்கிறார்கள். தங்கமணியும் மு.க.ஸ்டாலினை நாடுகிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை விமர்சிப்பதை நிறுத்துவதை நிறுத்திவிட்டார்.

சாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள்
துரைமுருகன் உதவியுடன் குவாரியை பெற்று 2 கோடியை மாதம் வருமானம் ஈட்டுகிறார் கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக ஆடுகிறார்கள். சாதி அடிப்படையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் பணம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள்.

கே.பி.முனுசாமி சதி
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சில எம்.எல்.ஏக்களை தங்கள் கையில் வைத்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளார்கள். எம்.எல்.ஏக்கள் யாரும் அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இல்லை. கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வர முயற்சி செய்தார். ஆட்சியிலிருந்தபோதே எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களை கொள்ளையடிக்க எடப்பாடி பழனிசாமி விட்டுவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications