‘வெட்கம் இல்லையா?’.. மோடி எதிர்ப்பில் தீவிரம் காட்டும் அதிமுக!
சென்னை: அதிமுக தலைவர்கள் மோடியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசியல் களம் இப்போது அதிமுக Vs மோடி என மாறி இருக்கிறது. திருப்பூர் வந்த பிரதமர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசி, அதிமுகவின் ஓட்டுகளை பாஜக பக்கம் திருப்ப நினைத்தார்.

ஒருவேளை அப்படிப் பேசினால் அதிமுக, மீண்டும் கூட்டணிக்குள் வரும் என்று நினைத்து ஒரு கணக்குப் போட்டுவிட்டுச் சென்றார்.
ஆனால், அவர் அப்படிப் பேசியதற்குப் பிறகு அதிமுக Vs மோடி மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்தச் சண்டை தமிழ்நாட்டைக் கடந்து புதுச்சேரி வரை நீண்டிருக்கிறது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளார் அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி. ஆகவே அங்குள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தேர்தல் பரப்புரைக்காக அடிக்கப்பட்ட சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களை பாஜகவினர் பயன்படுத்தி இருந்தனர். அதற்குப் புதுச்சேரி அதிமுக கடுமையாக எதிர்ப்புகளைப் பதியவைத்தது.
புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், இந்தச் செயலை பாஜக நிறுத்தி கொள்வது நல்லது. இதைப்போன்ற மலிவு விளம்பரத்தை பாஜக செய்வது அசிங்கம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதிமுக தலைவர்களின் படங்களைப் போட்டு பாஜக வாக்கு கேட்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எம்.ஜி,ஆர். ஜெயலலிதா படங்களைப் பயன்படுத்துவதற்கு பிஜேபி வெட்கப்பட வேண்டும். கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியலை பாஜக செய்வது வேதனையாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
அதன்பின்னர் போதைப் பொருள்கள் நடமாட்டத்திற்கு எதிராக அதிமுக தலைமை போராட்டத்தைத் தமிழகத்தில் அறிவித்தது. அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள் அனைவரும் திமுகவை வீழ்ந்த, தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆயுதமாக இதைக் கையில் எடுத்து போராட்டக்களத்தில் குதித்தனர்.

அந்தப் போராட்டத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேவையற்றது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, 'போதைப் பொருள் கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகமாகி உள்ளது பேசிவிட்டுச் சென்றார். தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது என்று அவர் பரப்புரை செய்துவிட்டுப் போனார்.
இதற்கு திமுக தரப்பிலிருந்து, தமிழ்நாட்டைவிடக் குஜராத்தில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகம் உள்ளது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மோடியின் கருத்துக்கு மாறாக இருந்தது அண்ணாமலை சொன்ன கருத்து.
இதற்குப் பதிலடி கொடுத்த கே.பி.முனுசாமி, "இந்தப் போதைப் பொருள்களின் ஊற்றுக்கண்ணே குஜராத்தில்தான் இருக்கிறது. அந்தக் குஜராத்தை ஆட்சி செய்பவர்கள் யார்? பாஜகவைச் சேர்ந்தவர்கள். கடந்த 25 வருடங்களாக பாஜகதான் அந்த மாநிலத்தை ஆண்டு வருகிறது.
அந்த மாநிலத்திற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து போதைப் பொருள்கள் வருகின்றன. அதன்பின்னர் பாகிஸ்தானிலிருந்தும் வருகிறது. ஈரானிலிருந்தும் வருகிறது. அங்குதான் போதைப் பொருள்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன.

ஹெராயினை பதப்படுத்தக் கூடிய அலகுகளைக் கொண்ட சிறுசிறு தொழிற்சாலைகள் குஜராத்தில்தான் அதிகம் உள்ளன. இதை எல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார் அண்ணாமலை. இந்தப் போதைப் பொருள் கடத்தல் கலாச்சாரம் சார்ந்து உள்ளே புகுந்து ஆராய்ந்தால் பாஜகவுக்கே அது ஆபத்தைத் தரும். ஆகவேதான் அண்ணாமலை இந்தப் போராட்டம் தேவையற்றது" என்கிறார்.
பாஜக பற்றிக் கடந்த சில மாதங்கள் முன்பாக கூட்டணியிலிருந்தவரை அதிமுகவினர் ஒரு வார்த்தை கூடச் சொல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு மோடிக்கு ஆதரவாக இருந்து வந்தார்கள்.
இப்போது அதிமுக தரப்பிலிருந்து அடுத்த நொடியே அனல் பறக்கும் பதிலடி தரப்படுகிறது.
அதிமுக தலைவர்களை மோடி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதற்கு உடனடியாக கே.பி. முனுசாமி தக்க பதிலடி கொடுத்தார்.
"பாஜகவை உருவாக்கியவர் வாஜ்பாய். அவரைப் பற்றி மோடி எதுவும் பேசுவதில்லை. அதேபோல் கட்சியை உருவாக்கி, இன்றைக்கு வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அத்வானி பற்றி எதுவும் பேசுவதில்லை.

தன் கட்சியிலிருந்த முன்னோடி தலைவர்களைப் பற்றிப் பேசாமல், எதிர்க்கட்சியில் உள்ள எம்.ஜி.ஆரை பற்றியும் ஜெயலலிதாவைப் பற்றியும் பேசி மக்களை ஏமாற்ற மோடி முயற்சி செய்கிறார்.
நரேந்திர மோடியின் சித்து விளையாட்டுக்கு அதிமுக தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக அமைக்கும் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும். அதன்பிறகு பிரதமர் மோடி தெரிந்து கொள்வார்" என ஆவேசமாகப் பேசி இருந்தார்.

இதற்கு முன்பாக இவரே, பாஜகவுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் ஏதேனும் மத்திய அமைச்சர்களைத் தமிழ்நாட்டில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியுமா? என்று சவால் விடும் தொனியில் பேசி இருந்தார்.
பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் வரும் என்று மோடி சொன்னதற்கு, ஜெயக்குமார், "இது திராவிட மண். இந்த மண்ணில் வடக்கில் உள்ள எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாய்ப்பே கிடைக்காது. மோடி வருகையால் தமிழ்நாட்டில் எந்தப் பலனும் பாஜகவுக்குக் கிடைக்காது. தமிழ்நாட்டில் அதிமுக அடுத்து திமுக. இதுதான் நிலை" என்று சேம் சைட் கோல் போட்டிருந்தார்.
கூட்டணியில் இருக்கும் போது மயான அமைதி காத்த அதிமுக இப்போது மோடிக்குப் போர்க் கொடி தூக்குவதில் முதல் வரிசையில் நிற்கிறது.
-
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு!












Click it and Unblock the Notifications