பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் இன்று காலை முதலே பரபரப்பாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் தொண்டர்களின் கூட்டம், கார்களின் அணிவகுப்பு என ஏரியாவே அதிர்ந்து கொண்டிருக்கிறது. தவெகவில் இணைய அதிமுக நிர்வாகிகள் திரண்டு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக நிர்வாகிகளை தவெக அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அதற்கு மேல் பரபரப்பு பனையூரில் ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு மெகா ஆபரேஷன் பனையூரில் அரங்கேறிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகள் மொத்தமாக தவெக கூடாரத்திற்குள் தஞ்சம் புகப்போகிறார்கள் என்ற தகவல் தான் இப்போது தீயாய் பரவி வருகிறது.

ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தவெகவில் இணையவுள்ளதாக ஒரு பலத்த தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை கிளப்பியது... ஆனால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகிய இருவருமே நேரடியாக பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை விசிட் அடித்துள்ளனர்.
இவர்கள் காரை விட்டு இறங்கியதும் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் கொடுத்த வரவேற்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.. முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோருடன், இன்னும் சில முக்கிய தலைகளும் லைனில் இருக்கிறார்கள்.
குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோரும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவாளர்களுடன் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய வந்திருப்பதாக தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், எம்.சி.சம்பத் தலைமையில் மட்டுமே சுமார் 500 பேர் தவெக கட்சியில் இணைய போவதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் ஒருபக்கம் என்றால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் போன்ற டாப் லெவல் முக்கிய புள்ளிகள் அனைவரும் தவெகவில் இணையப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவில் இணைவதற்காக அத்தனை அதிமுக நிர்வாகிகளும் காலை 10 மணிக்கே பனையூருக்கு வந்துவிட்டார்கள்.. ஆனால், தவெக அலுவலகத்திற்குள் அதிமுக நிர்வாகிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லையாம்..
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள், தவெக அலுவலக பின்வாசல் வழியாக செல்ல முயன்றுள்ளனர்.. கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால் அங்கு திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்லாமல் தவெக அலுவலகத்தில் அனுமதிக்கப்படாத அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.. எப்படியாது 11.30-மணிக்குள் தவெகவில் இணைந்துவிட வேண்டும் என்று நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications