"எடப்பாடி அளித்த பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை".. எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் அதிரடி அறிவிப்பு
சென்னை: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் நிர்வாகிகளை எடப்பாடி நீக்கி வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை எடப்பாடி நீக்கியுள்ளார் என்றும் எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். தலைமைக்கு எதிராக தக்க நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்று எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவது இல்லை என முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசிற்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்தார்.
பின்னர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியில் மீண்டும் இணைந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்ட எடப்பாடி அவர்களுக்கு பழைய பதவிகளை வழங்கவில்லை. இதனால் அவர்கள் இன்னும் அதிருப்தியிலேயே இருந்து வருகின்றனர். சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலே இருந்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களை மூத்த நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.
அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் இன்று : எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
