தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது.. காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது!
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மரணம் காரணமாக தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து இருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை செய்தி தாள் வாசித்துக் கொண்டு இருக்கும் போது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்து உள்ளது. தமிழக சட்டசபையின் உண்மையான பலம் 234. இதில் 21 இடங்கள் காலியாக இருந்தது. தற்போது கனகராஜ் மரணம் காரணமாக காலி இடம் 22 ஆக உயர்ந்து இருக்கிறது.
அதனால் தமிழக சட்டசபையில் இப்போது 212 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதிமுக 113 உறுப்பினர்களை கொண்டு இருக்கிறது. திமுகவின் பலம் 97 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காலியாக இருந்த 21 இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே சட்டசபை இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று தொகுதிகளில் வழக்கு நடந்து வந்தது. அதில் ஒட்டப்பிடாரம் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ திருப்பரங்குன்றம் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படும்.
இதனால் தற்போது ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications