பெரிய அடி வாங்கிய அதிமுக.. 7 தொகுதிகளில் டெபாசிட் காலி! 3 தொகுதிகளில் 3வது இடம்.. அதிர்ந்த ர.ரக்கள்!
சென்னை: தமிழ்நாடு + புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி அள்ளிய நிலையில், அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மொத்தமாக வாரி சுருட்டியது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இரு கட்சிகளுமே பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளன.

நாட்டின் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் கடந்த 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் வாக்களித்திருந்தனர். நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆரம்பம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 21 தொகுதி, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதி, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இடத்தில் அதாவது 2வது இடத்திற்கு அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பின்தங்கி, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பல தலைவர்கள் 2வது இடத்துக்கு வந்துள்ளனர். சில இடங்களில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
கோவையில் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்ற நிலையில், பாஜகவின் அண்ணாமலை இரண்டாம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதுபோன்று, 9 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
அதிமுக தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1 என 7 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் அதிமுக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
40ல் மொத்தம் 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது அதிமுக கூட்டணி. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 7 லோக்சபா தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications