Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவின் மோசமான ரெக்கார்ட்.. வரிசையாக 10வது தேர்தலில் தோல்வி.. எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிக்கு பின் தமிழ்நாட்டில் வரிசையாக 10 தேர்தல்களில் தோல்வி அடைந்து உள்ளது.

18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது.

Lok Sabha Election 2024 edappadi palanisamy 2024 Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024

அதேபோல் லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தருமபுரியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மணி முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவு அடைந்துள்ளார். சவுமியா அன்புமணி தற்போது 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். சவுமியா 2,89,094 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் திமுக மணி 3,00,237 முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் அதிமுக எங்கும் முன்னிலை பெறவில்லை. இதன் மூலம் 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.

வரிசையாக 10 தோல்வி; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.

இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமைந்து உள்ளது. தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்று அந்த கட்சி கடுமையான தோல்வியை தழுவி உள்ளது.

எதிர்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அதிமுக கட்சி லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார்.

விரக்தியாக எடப்பாடி பழனிச்சாமி இருந்துள்ளார் . உங்களை எல்லாம் 4 வருடம் சம்பாதிக்க விட்டேன். ஆனால் நீங்கள் தேர்தலில் செலவே செய்யவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள், என்றெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைதிப்படை ஆபரேஷன்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைதிப்படை ஆபரேஷன் ஒன்று நடந்து வருகிறதாம். அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாக்கிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+