திமுகவை வைராக்கியமாக எதிர்த்த.. அதிமுக மைத்ரேயன், அன்வர் ராஜா! தவெக போகாமல் திமுக போனது ஏன்?
சென்னை: அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, திமுகவை அரசியல் காலத்தின் தொடக்கம் முதல் எதிர்த்த மைத்ரேயன் இருவரும் அதிமுகவை விட்டு வெளியேறி உள்ளனர்.
இன்று காலை திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மைத்ரேயனை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து , திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026இல் தமிழகத்தில் திமுக ஆட்சி உறுதி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது.. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை 99 எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது என்று திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.பி. உறுப்பினர் மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மைத்ரேயன் - அன்வர் ராஜா - திமுக
மிக தீவிரமாக திமுகவை தொடக்க காலத்தில் இருந்தே எதிர்த்த இருவரும் அதிமுகவில் இருந்து வெளியேறியதும் திமுகவில் இணைந்துள்ளனர். திமுகவை கடுமையாக எதிர்த்து வந்த மைத்ரேயன் அன்வர் ராஜா.. தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் செல்வதை பற்றி யோசிக்ககூடவில்லை.. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தீவிர திமுக எதிர்ப்பாளர்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, 1986-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது திமுக ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், அதிமுகவுக்கு இது ஒரு சவாலாகவே இருந்தது. இருப்பினும், அன்வர் ராஜா தேர்தலில் வெற்றி பெற்றார். அன்வர் ராஜா அப்போதில் இருந்தே தீவிர திமுக எதிர்ப்பாளர்.
அன்வர் ராஜா, மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், எம்.ஜி.ஆர் அவரை உரையாற்ற அழைத்தார். மேலும், அதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அந்தக் குழுவில் 13 பேர் அமைச்சர்களாக இருந்தனர், அன்வர் ராஜாவும், ஜெயலலிதாவும் அமைச்சர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர் அன்வர் ராஜா.
அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா, மைத்ரேயன் இருவரும் இப்போது திமுகவில் ஐக்கியம் ஆகி உள்ளனர்.
தவெக போகாதது ஏன்?
1. தமிழக வெற்றிக் கழகம் திமுகவை கடுமையாக எதிர்க்க கூடிய கட்சிதான். மைத்ரேயன், அன்வர் ராஜாவிற்கு ஏற்ற கொள்கை இருந்தாலும்.. அவர் அங்கே செல்லவில்லை.
2. இதற்கு காரணம் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினாலும்.. பாஜகவை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர் மத்திய அரசை விமர்சிக்கும் அறிக்கைகளில் கூட திமுகவைத்தான் கடைசியில் விமர்சனம் செய்கிறார். பாஜகவை பெரிதாக தாக்குவது இல்லை.
3. பாஜகவை பல இடங்களில் நேரடியாக விஜய் அட்டாக் செய்வது இல்லை. இது அன்வர் ராஜாவின் முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.
4. அதோடு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார்கள். ஒரு பிரம்மாண்ட கட்சி அதிமுகவிற்கு வருவதாக எடப்பாடி கூறி இருப்பது இதே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைத்ரேயன், அன்வர் ராஜா தமிழக வெற்றிக் கழகத்திற்கு போய்.. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது தர்மசங்கடமாக இருக்கும்.
5. அதோடு தமிழக வெற்றிக்கழகம் சிறிய கட்சி. இன்னும் நிரூபிக்காத கட்சி. அப்படிப்பட்ட கட்சியில் எதிர்காலமும் இல்லை. மைத்ரேயனுக்கு பெரிய பதவிகள் இங்கே கிடைக்காது.
6. திமுகவில் அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு தொடங்கி செந்தில் பாலாஜி வரை பலர் பெரிய அளவில் மரியாதை பெறுகின்றனர். முக்கிய பொறுப்புகளையும் பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் மைத்ரேயன், அன்வர் ராஜாவிற்கு இது பெரிய அளவில் நல்வாய்ப்பாகவும் இருக்கும்.. என்பதால் அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றதாக கூறப்படுகிறது.
7. எண்ணப்படி இரண்டாம் கட்ட தலைவர்களை பெரிதாக மதிப்பது இல்லை என்ற புகார் உள்ளது. மைத்ரேயன், அன்வர் ராஜா கட்சி மாற இதுவும் காரணமாக இருக்கலாம்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்











Click it and Unblock the Notifications