அம்மா.. அம்மா.. அம்மா.. ஒரே சொல்தான்.. வாக்குகளை அள்ளிய எடப்பாடி.. தேர்தல் அறிக்கையில் அதிமுக மேஜிக்
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் விதவிதமான திட்டங்கள் , இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
2021 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக அதிமுக தேர்தல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. இதில் பல தொலைநோக்கி திட்டங்கள் இருந்த நிலையில் அதிமுக அதை மிஞ்சும் அளவிற்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு
அதிமுக சார்பாக அம்மா பெயரில் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் அம்மா உணவகம், அம்மா பேன், அம்மா மிக்சி என்று பல அறிவிப்புகள், திட்டங்கள் மூலம் மக்களை அதிமுக கவர்ந்தது. தற்போது அதே போன்ற திட்டங்களை அதிமுக அறிவித்து இருக்கிறது. அம்மா பெயரில் இலவச அறிவிப்புகளை அதிமுக வெளியிட்டுள்ளது.

அம்மா திட்டங்கள்
அதிமுகவின் அம்மா திட்டங்களின் பட்டியல். அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். அனைவருக்கும் சூரிய சக்தி அடுப்பு வழங்கப்படும். அம்மா வாஷிங்மெசின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மா பெயரில் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேறு இலவசங்கள்
இது போக இன்னும் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வ்வழங்கப்படும். ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும்.

கல்விக்கடன்
கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை. இலவச கேபிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அதிமுக தேர்தல் அறிக்கை. எம்ஜிஆர் பசுமை ஆட்டோ திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ25,000.பெண் குழந்தைகளை பாதுகாக்க திட்டம்- அதிமுக தேர்தல் அறிக்கை. கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்படும்.

செம
தரங்கம்பாடி சீகன்பால்கு இல்லம் அரசுடைமையாக்கப்படும். இந்து ஆன்மீக பயணத்துக்கான சிறப்பு கட்டணம் உயர்த்தப்படும். அனைத்து மத பழுதடைந்த ஆலயங்கள் புனரமைக்கப்படும்.நம்மாழ்வர் பெயரில் இயற்கை வேளாண் மையம் அமைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

கச்சத்தீவு
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்.முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்யும். அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை.

அதிரடி அறிவிப்பு
முழுக்க முழுக்க இலவச திட்டங்கள் மூலம் அதிமுக மொத்தமாக எளிய மக்களின் வாக்குகளை குறி வைத்து இருக்கிறது. வாக்காளர்களையும், அவர்களின் பொருளாதார நிலையையும் மனதில் வைத்து இந்த வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டுள்ளது. மொத்தமாக எடப்பாடி பழனிச்சாமி இந்த அதிரடி வாக்குகள் மூலம் மக்களை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

வரவேற்பு
அம்மா திட்டங்களுக்கு எளிய மக்கள் இடையே பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது அதே திட்டங்களை அதிமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் மத்தியில் இந்த திட்டங்களை பெரிய மாயத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் இப்போதே பாராட்ட தொடங்கி உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications