சிஏஏ நிச்சம் திரும்ப பெறமாட்டாது... அதிமுக தேர்தல் வாக்குறுதிக்கு நேர் எதிராக... பாஜக கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், பாஜக தொடர்ந்து சிஏஏ-வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை இந்த முறை பாஜத, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து அதிமுக எதிர்கொள்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இலவச வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்காளர்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றிருந்தது.

குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டம்

அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதேபோல திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்றும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வலியுறுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இரு கட்சிகளும் வாக்குறுதி

இரு கட்சிகளும் வாக்குறுதி

தொடக்கம் முதலே திமுக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணியும் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன.

திமுகவுக்கு எதிர்ப்பு

திமுகவுக்கு எதிர்ப்பு

ஆனால், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தொடர்ந்து சிஏஏ ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறது. பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த திமுகவின் வாக்குறுதியைக் கடுமையாக எதிர்த்துள்ளார். யார் எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ரத்து செய்யபடமாட்டாது

ரத்து செய்யபடமாட்டாது

இது குறித்து சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், "சிஏஏ-வுக்கு எதிராகத் தனது கட்சி தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார்? ஸ்டாலின் மட்டும்டுமல்ல வேறு யாரும் இதை எதிர்க்கக் கூடாது. சிஏஏ என்றும் ரத்து செய்யப்படாது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+