சென்னையில் கடத்தப்பட்ட இளம் பெண்.. புதுச்சேரி ஓட்டலில் மீட்பு.. அதிமுக பிரமுகர் அதிரடியாக கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரில் இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார், அந்த பெண்ணை புதுச்சேரியில் இருந்து மீட்டனர்.

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கோகுல கிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திருவொற்றியூர் மேற்கு பகுதி அதிமுக மாணவரணி செயலாளராகவும் உள்ளார்.

அதே பகுதியில் எம்பிஏ பட்டதாரியான 24 வயதான இளம் பெண், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இளம் பெண்

இளம் பெண்

ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண், கோகுலகிருஷ்ணனிடம் பேசுதையும் பழகுவதையும் தவிர்த்தார். செல்போனில் பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

கோபம்

கோபம்

இதனால் கோபமடைந்த கோகுலகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்த முடிவு செய்தாராம். கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இதுகுறித்து போலீசில் இளம் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம்பெண்ணை தேடினார்கள்.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இந்தநிலையில் புதுச்சேரியில் கோட்டைகுப்பம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம்பெண்னும், கோகுலகிருஷ்ணனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு இருவரையும் மீட்டு சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

விசாரணையில் அந்த இளம்பெண், தனது விருப்பம் இல்லாமல் கோகுலகிருஷ்ணன் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக புதுச்சேரிக்கு காரில் கடத்திச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோகுல் கிருஷ்ணன் மீது போலீசார் ஆள்கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+