தனி ரூட் எடுத்த தளபதி.. தலை இருக்கே! அள்ளிக்கொடுத்த அதிமுகவினர்! முகம் மலர்ந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அதிமுகவினர் அஜித் உடன் எடப்பாடி பழனிசாமி நிற்பதை போன்ற புகைப்படத்தை பரிசாக வழங்கியுள்ளனர். இதனை எடப்பாடி மகிழச்சியாக பெற்றுக்கொண்டிருக்கிறார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியவுடன், பலரும் அவரை கூட்டணிக்கு இழுக்க முயன்றனர். குறிப்பாக அதிமுக பெரிய அளவில் முயற்சியை மேற்கொண்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கின்றன. இந்நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்திருக்கின்றன. விஜய்க்கு இருக்கும் ஆதரவு அரசியல் தலைவர்களை பதம் பார்த்திருக்கிறது. இந்நிலையில் விஜய்யை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக சில சம்பவங்களும் நடந்தது.
அதாவது நாமக்கல்லில், எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் தவெக கொடி ஒன்று பறந்தது. இதை பார்த்து உற்சாகமடைந்த அவர், "இதோ பாருங்கள், கொடி பறக்கிறது -பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்" என்று பேசினார். அப்படியெனில் விஜய்யை சேர்க்க எடப்பாடி முழு வேகத்தில் இருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால், வந்தா ராஜாவாத்தான் வருவேன் என, விஜய் முடிவெடுத்துவிட்டார்.
அதாவது தேர்தல் என வந்துவிட்டால் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் இந்த கூட்டணி முடிவை எடப்பாடி கைவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இப்படி இருக்கையில் தற்போது எடப்பாடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பகுதியில், அதிமுகவினர் அஜித், எடப்பாடி பழனிசாமி இணைந்து இருக்கும் போட்டோவை பரிசளித்திருக்கின்றனர். இதனை எடப்பாடி முக மலர்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியெனில், எடப்பாடி அஜித் ஆதரவை நாடுகிறாரோ? என்று சிலர் பேச தொடங்கியுள்ளனர்.
அஜித் நேரடியாக தனது ஆதரவை தெரிவிக்க மாட்டார். இருப்பினும் அஜித் ரசிகர்களை தன் வசப்படுத்த இந்த யுக்தியை அதிமுகவினர் பயன்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications