தலைக்கு மேல் நெருக்கடி.. தகிக்கும் பிரச்சினைகள்.. எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் அதிமுக
Recommended Video
சென்னை: ஒரு பக்கம் தங்க தமிழ்செல்வன் விவகாரம், மறுபக்கம் மக்களை திணடிறக்கும் பிரச்சனைகள் என்று பரபரத்து கிடக்கும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது!
தமிழகத்தில் முதல் பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை தலையெடுத்து உள்ளது. ஏற்கனவே அதிருப்தியில் உள்ள மக்கள், அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினால், அதிமுக தலைமை மீது கொதிப்பில் உள்ளனர்.
மேலும், அதிமுகவுக்குள் ஏகப்பட்ட உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் ரிசட்டுக்கு பிறகு இது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இரட்டை தலைமை விவகாரம், ஓபிஎஸ்-ன் கெடுபிடி என விவகாரங்கள் தேங்கி உள்ளன.

உள்ளாட்சி தேர்தல்
இதற்கு நடுவில் தங்க தமிழ்செல்வனின் வருகை அதிமுகவுக்கு அமையுமா, அமையாதா என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் வரப் போகிறது. இந்த தேர்லில் அதிமுக கூட்டணி கட்சியுடன் குறிப்பாக பாஜகவுடன் கூட்டு வைக்க போகிறதா, தனித்து போட்டியிட போகிறதா என்று தெரியவில்லை.

அறிவிப்பு
இத்தனை குழப்பத்திலும், இன்னலிலும் அதிமுக தவித்து வருகிறது. இந்த சூழலில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பினை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

எம்எல்ஏக்கள்
"சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் . முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விவாதங்கள்
எத்தனையோ பிரச்சனையில் தமிழகம் பரபரத்து கிடக்க, வெறும் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.. எப்படி பார்த்தாலும், இன்றைய சூழலில் நடக்க போகும் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் பொதுமக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications