சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. நடக்கப் போகும் 2 விஷயங்கள்.. ஜெயக்குமார் பேச்சை கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் ஜூன் 14 ஆம் தேதி மதியம 12 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது என முன்னாள் அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

வருகிற 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.

 ஒபிஎஸ் இபிஎஸ் வழி

ஒபிஎஸ் இபிஎஸ் வழி

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கவேண்டும் . சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; இந்நிலை தொடரும். அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள்‌

 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக, அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3% தான். ஈபிஎஸ்-ஓபிஎஸ்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் அதிகளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளோம்." என்றார். எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கொறாடா பதவிக்கு கே.பி.முனுசாமி காய்நகர்த்துவதாவும் சொல்லப்படுகிறது. ஆனால் யாருக்கு அந்த பொறுப்பை ஓபிஎஸ் இபிஎஸ் வழங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. கட்சியின் தற்போதைய சூழலில் இரட்டை தலைமையை நீடிக்கும் என்பது ஜெயக்குமாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. அதிமுக பொதுச் செயலாளராக யாரும் தேர்வு செய்யப்படும் போவதில்லை என்ற ஜெயக்குமாரின் அறிவிப்பு இதை உறுதி செய்கிறது.

 பேசப்போகும் விஷயம்

பேசப்போகும் விஷயம்

சசிகலாவின் ஆடியோக்கள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்திய வருகிறது. அவர் கொரோனா தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திருப்பிய பிறகு தீவிர அரசியலில் இறங்க உள்ளாராம். இந்த விவகாரம் குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
ex minister jayakumar said aiadmk mlas meeting on June 14 at aiadmk office due to elect of deputy opposition leader in tamilnadu assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X