நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?
சென்னை: தமிழக சட்டசபையில் கட்சியின் குழு தலைவரை (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் 2-வது முறையாக சென்னையில் நாளை கூடுகின்றனர். இந்த கூட்டத்திலாவது அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யாருக்கு சட்டசபை எதிர்க்கட்சி குழு தலைவர் பதவி கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்தது; முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்; இதனால் ஆயிரம் அதிருப்திகள் இருந்தாலும் அத்தனையையும் பூட்டிவைத்துக் கொண்டு அமைதி காத்தது ஓபிஎஸ் தரப்பு.

ஓபிஎஸ் எதிர்ப்பு பாணி
அவ்வபோது பூடகமான செயல்பாடுகள் மூலம் தங்களது எதிர்ப்பை ஓபிஎஸ் தரப்பு காட்டிக் கொண்டிருந்தது. அதிகாரத்தை கையில் வைத்திருந்ததால் இதையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடந்து போய்க் கொண்டிருந்தார் ஈபிஎஸ்.

முட்டி மோதும் ஈபிஎஸ், ஓபிஸ்
ஆனால் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவில் யாரும் பொறுத்துப் போவதாகவும் இல்லை. யாரும் எந்த ஒரு பதவியையும் எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை. சட்டசபை குழு தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே பகிரங்கமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் முட்டி மோதினர்.

கூட்டம் ஒத்திவைப்பு
இதனால்தான் 4 மணிநேரம் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒரு முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் நாளை நடைபெறுகிறது. என்னதான் சீனியர் தலைவர்கள் இருதரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் விட்டுக் கொடுத்து நிற்பதாக தெரியவில்லை.

சசிகலா ஆதரவு முழக்கம்- நாளை கூட்டம்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் சசிகலா தலைமைதான் வேண்டும் என்கிற குரலும் அதிமுகவில் வெடிக்க தொடங்கி உள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையிலாவது அதிமுகவின் உட்கட்சி அதிகராப் போர் முடிவுக்கு வருமா? நாளைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவார்களா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications