கூட்டுறவு சங்க மசோதா.. எடப்பாடி தலைமையில் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள்
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். ஆளுநர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்று, சட்டசபை ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் பேரவை விதி எண் 110 கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
மூன்றாவது நாளான இன்று கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது . எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின்னர் கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். நகராட்சி சட்டங்கள் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். பல்வேறு சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications