களைகட்டிய ராயப்பேட்டை.. அதிமுக அலுவலகத்துக்கு வந்த எம்ஜிஆர், ஜெ.,! மாற்றி யோசித்த மதுரை சரவணன்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளிடம் விருப்பம் மனுக்களை பெற்று வருகிறது, நேற்று மட்டும் 1200க்கும் மேற்பட்ட விருப்பம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வேடமிட்டவர்களுடன் சென்று விருப்ப மனு தாக்கல் செய்தார்.
மதுரையில் மூன்று தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்திருக்கும் அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடவும் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

அதிமுக விருப்ப மனு
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதல் நாளிலேயே இந்த நிகழ்ச்சி களைகட்டியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர்.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகம்
நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 349 பேர் தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில், 888 பேர் தங்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இது, வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்குள் எதிர்பார்ப்பும் போட்டியும் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
விருப்ப மனு திருவிழா
தமிழகத்தில் உள்ள பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளுக்கு விருப்ப மனு பெற ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி வழங்கப்படுகின்றன. விருப்ப மனு விநியோகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், இந்த நடைமுறை டிசம்பர் 23-ஆம் தேதி வரை தொடரும் என்றும் கட்சி அறிவித்துள்ளது.
மதுரை சரவணன்
இந்தச் சூழலில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் விருப்ப மனு தாக்கல் செய்ய வந்த விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேள, தாளத்துடன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமிட்டவர்களுடன் அவர் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்தார். இதனால் ராயப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் திருவிழா போல களைகட்டியது.

களைகட்டிய ராயப்பேட்டை
மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன், மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே டாக்டர்.சரவணன் மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி
அதோடு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு, மதுரை மத்தியம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 9 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வேண்டும் எனவும் அவர் தனியாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications