யார் போகலனா என்ன.. நாங்க போவோம்.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு.. அந்தப் பக்கம் ஓபிஎஸ்ஸும் ரெடியாம்!!
சென்னை : காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் முன்னாள் சபாநாயகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டாக இன்று அறிவித்தன.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மதிமுக, விசிக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனக் கூறியிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மே 28ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த எம்.பிக்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஆர்.தர்மர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 19 எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக இந்த திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications