ரெய்டு நடவடிக்கை எதிரொலி... திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தில் அதிமுக..!
சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரத்தை அதிமுக முகாம் சற்று சீரியஸாகவே பார்க்கிறது.
இன்று அவர், நாளை நாம், இப்படியே சென்றால் என்னாவது என நேற்று முன்னாள் மாஜிக்கள் சிலர் தங்களுக்குள் நடத்திய ஆலோசனையில் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன என யோசிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் நடத்தாமல் மாநிலம் தழுவிய அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினால் சோர்ந்துகிடக்கும் தொண்டனும் சற்று உற்சாகமடைவான் என்ற பேச்சும் ஓடியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர்
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லம் உட்பட அவருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. அதோடு மட்டுமல்லாமல் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கூறி அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்., ஆருக்கு அதிமுக உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்துள்ளனர்.

சோதனை நீளும்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டோடு இந்த சோதனை முடிந்துவிடாது அது இன்னும் நீளும் என்பது பல மாஜிக்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் இதனை வேடிக்கை பார்க்க தயாராக இல்லை. ரெய்டு நடவடிக்கையை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி ஒற்றுமையுடன் எதிர்ப்பை பதிவு செய்வது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

ஆடிட்டர்
இதனிடையே சில முன்னாள் அமைச்சர்கள் எந்த வழக்கு போட்டாலும் சரி, எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் சரி அதன் மூலம் இம்மியளவு கூட பாதிப்பு ஏற்படாத வகையில் பக்காவாக முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார்கள். திறமைவாய்ந்த ஆடிட்டர்களை வைத்து கணக்கு வழக்குகளை நேர் செய்து, மடியில் கணமில்லை அதனால் வழியில் பயமில்லை என்கிற வகையில் இருக்கிறார்கள்.

தேர்தல் தோல்வி
தேர்தல் தோல்வி, சசிகலாவின் அரசியல் வேகம், இரட்டை தலைமையில் உள்ள பனிப்போர் உட்பட இன்னும் சில காரணங்களால் அதிமுக தொண்டர்கள் சற்று குழப்பமடைந்தும் சோர்வடைந்தும் காணப்படுகின்றனர். இதனிடையே அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும் என்பது அதிமுக சீனியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications