அதிமுக பேரணி.. ஸ்தம்பித்த அண்ணாசாலை!.. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஜாம்
சென்னை: கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணியாக சென்று கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் கையில் பதாகையுடன் பேரணியாக செல்வதால் கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலையில் அக்னி வெயிலில் வறுபட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, திமுக ஆட்சி தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக இன்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெறுகிறது.
அதன்படி, வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் அதிமுகவினர் ஒன்றிணைந்தனர். அங்கிருந்து சின்னமலை தாலுகா அலுவலக சாலை வழியாக பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதிமுகவினரின் பேரணியால் சென்னை சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை நோக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக வந்ததால் கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் கடும்ப போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அண்ணாசாலையில் பேருந்துகளும், கார்களும், இருசக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்றன. அக்னி நட்சத்திர கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அண்ணாசாலையில் சிக்கி வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனிடையே அதிமுக அனைவரும் மொத்தமாக ஆளுநர் மாளிகை நோக்கி வரவே காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தை மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் காவலர்கள் அனுமதித்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி புகார் மனுவை அளித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications