காலம் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது.. அப்போ முடிவு விபரீதமாக இருக்கும்.. ஆர்பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தல் முடிவு குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், காலம் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அப்போது முடிவு ரொம்ப விபரீதமாக இருக்குமென தவெகவை தாக்கி பேசினார். மேலும் ஏழைகளுக்கான அதிமுகவை அபகரிக்க முயற்சிக்கிறார்கள், இது கேவலமான செயல் எனவும் விமர்சித்தார்.

நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து போட்டியிட்ட சத்தியபாமா, மரகதம் குமரவேல் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு தொகுதியிலும் திமுக இரண்டாம் இடமும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டன. இடைத்தேர்தல் முடிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-

RB Udhayakumar

எந்த மாற்றமும் ஏற்படாது

எடப்பாடி முதல்வராக வர முடியுமா.. இல்லை எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமா.. எதுவும் இல்லை. எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஆனால் ஆளுங்கட்சிக்காரர்கள் எங்களுக்கு வாக்களித்தால் தான் தண்ணீர் கிடைக்கும் என்று.. தாராபுரத்தில் ஏற்கனவே குடிநீர் பஞ்சம் இருக்கிறது. இதனால் மக்கள் வாக்களித்துள்ளார். 29 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் வந்துள்ளது.

அதாவது கடந்த பொதுத்தேர்தலில் தவெக தனித்து நின்று இந்த தொகுதியில் 29 சதவீதம் வாங்குனாங்க. ஆனால் இந்த முறை பல கட்சி கூட்டணிகளுடன் 35 சதவீதம் வாங்கியுள்ளது. விசிக, காங்கிரஸ், ஐயூஎம்.எல், மதிமுக இருக்கிறது. எல்லா அமைச்சர்களும் சேர்ந்து இங்க வந்து நாள் கணக்காக பிரசாரம் செய்தார்கள். ஆளும் கட்சி வேற.. முதல்வர் விஜய்யும் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்து.. 100 கிராம மக்களை சந்தித்து, முருங்கைக்காய் பறித்து, மாட்டு வண்டி ஓட்டி.. இந்த வாக்குகளை பெற முடிந்து இருக்கிறது.

எடப்பாடி முதல்வராக இருந்த போது..

எடப்பாடி முதல்வராக இருந்த போது திமுக வெற்றி பெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இதேபோன்று காங்கிரஸ் வெற்றி பெற்ற நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது, முதல்வராக இருந்த போது இந்த இரு தொகுதியிலுமே அதிமுக தான் வெற்றி பெற்றது. அப்போது எடப்பாடி தலைமையில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் இப்போது எடப்பாடி தலைமையில் தோல்வி தோல்வி என சொல்லுகிறார்கள். அது வேறு யாரும் இல்லை, இங்கு இருந்து சென்றவர்கள் தான்.

நீங்க போயிட்டீங்கன்னா போங்க.. அது உங்கள் விருப்பம். ஆனால் அடையாளம் கொடுத்து, ஆளாக்கி, அதிகாரம் கொடுத்தவர்களை மறக்காதீங்க.. இங்க இருந்து போனவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அதிமுக உங்களை அடையாளப்படுத்தி ஜெயிக்க வச்சதனால் தான் விஜய் உங்கள் முகம் கொடுத்து பார்க்கிறார். இதே இரண்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தவெக வேட்பாளர்களை விஜய் பார்த்தாரா என்பது கூட தெரியாது.

காலம் எப்போதும்..

நீங்க எந்த கட்சிக்கு கூட போங்க. அது உங்க உரிமை. ஜனநாயக நாட்டில் அவங்க அவங்களுக்கு விருப்பமானதை செய்யலாம். ஆனால் அங்கே போய் அவார்டு வாங்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை அவதூறாக பேசவேண்டாம். தவெக கட்சிக்காரங்களை விட, அதிமுகவில் இருந்து போனவங்க தான் எங்களை ரொம்ப அவதூறாக பேசுறாங்க.. இதை பார்க்கும் போது எங்களுக்கு வேதனையாக இருக்குது.

காலம் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அப்போது முடிவு வந்து ரொம்ப விபரீதமாக இருக்கும். கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்த கட்சி இது. ஏழைகளுக்கான கட்சி அதிமுக. ஏழைகளுக்கான அதிமுகவை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இது எவ்வளவு கேவலமான செயல்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+