எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்..எம்ஜிஆர் மாளிகையில் ரத்தத்தின் ரத்தங்கள்! விருப்பமனு ட்விஸ்ட்
சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யும் பணி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு தாக்கலில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுவரை சுமார் 10ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பெரும்பாலான மனுக்கள் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.
2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் தரப்பிலிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனு வழங்கல் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியது.
நேற்று (டிசம்பர் 23) மாலையுடன் இந்த பணியும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இதற்காக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சாதாரண தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தமிழக தேர்தல் 2026
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமே இதற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு மனுவுக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதிகளுக்கான மனுவின் கட்டணம் ரூ.5,000 ஆகும். மனு வாங்குபவர்கள் வரைவோலை செலுத்தி, தேவையான விபரங்களை நிரப்பி ஒப்படைக்க வேண்டும்.
அதிமுக விருப்ப மனு
இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் வரை விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், பலர் தங்கள் பெயரில் மனு தாக்கல் செய்ததோடு, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தங்கள் தொகுதியில் நேரடியாக போட்டியிட வேண்டும் என்பதற்காகவும் தனியாக விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில தொகுதிகளில் மக்கள் விருப்பத்தையும் கொண்டு, தொண்டர்கள் இப்படிப்பட்ட மனுக்களை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜி.வி. கஜேந்திரன் மனு
இதன் ஒரு எடுத்துக்காட்டாக, ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி. கஜேந்திரன், எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். ஒரு தொகுதிக்கு ரூ.15,000 என மொத்தம் ரூ.18 லட்சம் வரைவோலை செலுத்தி அவர் இதற்கான மனுக்களை அளித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது சொந்த ஆரணி தொகுதியிலும் அவர் தனிப்பட்ட முறையில் போட்டியிடும் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். மேலும் அதிமுக ஐடி விங் சார்பில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி நிற்க வேண்டும் என 15 ஆயிரம் ரூபாய் என தொகுதிக்கு பணம் செலுத்தப்பட்டு மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்காக மட்டும் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் ஆதரவு
ஜெயலலிதா இருந்த போது அவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அதிமுகவினர் அதிக அளவில் மனு அளிப்பார்கள். கடந்த தேர்தலில் இது வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது எடப்பாடி போட்டியிட வேண்டும் என மீண்டும் அதிக அளவில் மனுக்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வட்டாரங்கள் சொன்ன தகவலின் படி இதுவரை 10,000 மேற்பட்டோர் விருப்பமான தாக்கல் செய்துள்ளனர் .அதில் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டுமென அதிக விருப்பம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இவ்வாறு, எடப்பாடி பழனிசாமியின் பெயரில் பெருமளவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது, கட்சிக்குள் அவருக்கு உள்ள ஆதரவை வெளிப்படையாக காட்டுகிறது.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications