சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மா வாஷிங்மெசின் முதல் சிஏஏ எதிர்ப்பு வரை.. வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை.. மாஸ் வாக்குறுதிகள்

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக அதிமுக தேர்தல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மே 2ஆம் தேதி புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் பணிகளை இரு கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று மதியம் வெளியிடப்பட்டது. அதில் மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.

எடப்பாடி முதல் ஏற்காடு வரை.. தரமான முடிவெடுத்த திமுக.. எகிறவைக்கும் சேலம் 'லிஸ்ட்'எடப்பாடி முதல் ஏற்காடு வரை.. தரமான முடிவெடுத்த திமுக.. எகிறவைக்கும் சேலம் 'லிஸ்ட்'

அதிமுக தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கை

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்கட்சியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

  • அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறம்பம்சங்கள்,
  • அனைவருக்கும் சூரிய சக்தி அடுப்பு வழங்கப்படும்- அதிமுக தேர்தல் அறிக்கை
  • அம்மா வாஷிங்மெசின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
 அரசு பணி

அரசு பணி

  • வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்
  • அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம் அமல்படுத்தப்படும்
  • சிஏஏவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்
 இரட்டை குடியுரிமை

இரட்டை குடியுரிமை

  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வ்வழங்கப்படும்
  • ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும்
  • கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - அதிமுக தேர்தல் அறிக்கை
 விடுப்பு

விடுப்பு

  • மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும்
  • நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை
  • இலவச கேபிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற முக்கியமான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன .

English summary
AIADMK to release its election manifesto today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X