Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதிமுக நேரடியாக போட்டியிடும் 169 தொகுதிகளின் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. வீக்கான தொகுதிகளை பாஜக + கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக பலமாக உள்ள பல தொகுதிகளில் போட்டியிடுகிரார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு போன்ற முக்கிய பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வந்தன.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Edappadi Palaniswami bjp

அந்த வகையில், சமீபத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார்.

அதிமுக கூட்டணி

அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகளுக்கு 1 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீடு

அதனைத் தொடர்ந்து, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி முழுமை பெற்றதாக அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக தொகுதி பட்டியல்

இதற்கான முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் வடதமிழகம், மத்திய மற்றும் தென் தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய, அதிமுக மிக வலுவாக உள்ள பல முக்கிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், மேற்கு மண்டலம், மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என அதிமுகவுக்கு ஆதரவும், வாக்கு வங்கியும் இருக்கும் மாவட்டங்களை மட்டுமெ எடப்பாடி பழனிசாமி குறிவைத்துள்ளார்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

அதனபடி, மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவிடைமருதூர், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி,

வட மாவட்டங்கள்

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, செய்யூர், மதுராந்தகம்,

மேற்கு மண்டலம்

குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், செங்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூர் (சேலம்), ஏற்காடு,

கொங்கு மண்டலம்

ஓமலூர், மேட்டூர், குமாரபாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஈரோடு கிழக்கு, தாராபுரம், காங்கேயம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், திருப்பூர் வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், எடப்பாடி, சங்ககிரி, சேலம் தெற்கு, வீரபாண்டி, சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை,

அதிமுக போட்டி

பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயுரம், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனிகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், சிவகங்கை" ஆகிய தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+