அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி!
சென்னை: அதிமுக 3-ஆம் மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்டங்களாக அதிமுக வேட்பாளர்கள் வெளியிட்ட நிலையில் இறுதி கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு திருவிக நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
2026 சட்டசபை தேர்தல் களத்தில் அதிமுக முழுவீச்சில் இறங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒப்பந்தத்தை முடித்து, அவர்களுக்கான இடங்களையும் அறிவித்துவிட்ட நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
இதன்படி கடந்த 25 ஆம் தேதி அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்த பட்டியலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட 23 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.
அதனை தொடர்ந்து அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். மொத்தமாக அதிமுக சார்பில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல்
இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள். புதுமுகங்கள், டாக்டர்கள், பட்டதாரி கள், பெண்கள் என கலவையாக இருந்தது. 150 தொகுதிகளில், 17 பேர் பெண்கள். 42 பேர் புதுமுகங்கள் இடம் பெற்று இருந்தனர். தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதேபோல் 31 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் களம் காண்கிறார்கள். இந்த நிலையில் தான் மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று காலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
17 தொகுதிகள் என்னென்ன?
ஆயிரம் விளக்கு: வளர்மதி
அண்ணா நகர்: கோகுல இந்திரா
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: ஆதிராஜாராம்
திட்டக்குடி: முருகுமாறன்
துறைமுகம்: ராயபுரம் மனோ
விருகம்பாக்கம்; விருகை ரவி
தி.நகர்: சத்தியநாராயணன்
வேளச்சேரி: அசோக்
சோழிங்கநல்லூர்: கேபி கந்தன்
ஆர்.கே.நகர்: ராஜேஷ்
வில்லிவாக்கம்: விஜயகுமார்
திருச்சுழி: ராஜவர்மன்
ஆலந்தூர்: சரவணன்
கொளத்தூர்: சந்தான கிருஷ்ணன்
எழும்பூர்: அபிஷேக் ரங்கசாமி
ஆலங்குடி: தன விமல்
கூட்டணி கட்சிகளுக்கு 67
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மயிலாப்பூர் (பா.ஜனதா), பெரம்பூர் (பா.ம.க.). தவிர 14 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை 167 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. கூட்டணி கட்சிகள் சில அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. போட்டியிடும் 167 தொகுதிகளில் 150 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட் டுள்ளனர். எஞ்சியுள்ள 17 தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டுள்ள நிலையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications