Thambidurai: 6-வது முறையாக எம்பியாகும் தம்பிதுரை.. அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிப்பு.. பாமகவுக்கு ஒரு சீட்
சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை தேர்வு செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 5 முறை ராஜ்யசபா எம்பியாகவும், ஒரு முறை லோச்சபா எம்பியாவும் தம்பிதுரை இருந்துள்ளார். இதேபோல் இன்னொரு ராஜ்யசபா சீட்டானது பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் என மொத்தம் 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

ராஜ்யசபா தேர்தல் 2026
அதன்படி, இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. ராஜ்ய சபா தேர்தல் வரும் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய மார்ச் 5ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களமும் அனல் பறந்துகொண்டிருக்கும் சூழலில் ராஜ்யசபா சீட்டுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் திமுக முந்திக்கொண்டு இன்று வேட்பாளர்களை அறிவித்தது.
அதிமுக வேட்பாளராக தம்பிதுரை
இந்த நிலையில் அதிமுகவும் ராஜ்யசபா வேட்பாளராக தம்பிதுரையை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இதன் மூலம் தொடர்ந்து 5-வது முறையாக ராஜ்யசபா எம்பியாக உள்ளார் தம்பிதுரை. ஏற்கனவே 5 முறை ராஜ்யசபா எம்பியாகவும், ஒரு முறை லோச்சபா எம்பியாவும் தம்பிதுரை இருந்துள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதாவது திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் அதிமுகவுக்கு இருவரை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் 4 பேரை தேர்வு செய்ய முடியும்.
திமுக வேட்பாளர்கள் யார் யார்?
இதன்படி தான் தற்போது திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக சார்பில் எல்.கே சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள ஒரு ராஜ்யசபா இடம் காங்கிரசுக்கு அறிவித்துள்ளது திமுக. வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறினார்.
பாமகவுக்கு ராஜ்யசபா சீட்
அதிமுக பாஜக கூட்டணியில் தற்போது தம்பிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீதி உள்ள ஒரு இடமானது பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசனுக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் யார் யாருக்கு?
* திமுக - திருச்சி சிவா
* திமுக - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
* தேமுதிக - எல் கே சுதீஷ்
* காங்கிரஸ் - இன்னும் அறிவிக்கப்படவில்லை
அதிமுக பாஜக கூட்டணியில் யார் யாருக்கு?
* அதிமுக - தம்பிதுரை
* பாமக - (வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை)
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications