அந்த பக்கம் வேலுமணி.. இந்த பக்கம் சண்முகம்! எடப்பாடிக்கு செக் வைக்கும் மாஜிகள்! இப்படி ஒரு ப்ளானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழகசட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புறக்கணித்தது கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோவை நிர்வாகிகள் கூட்டத்தை எஸ்பி வேலுமணி புறக்கணித்த நிலையில், தற்போது சிவி சண்முகமும் அதே நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புதிய வியூகத்தை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டசபை தேர்தல் முடிவுகளை இன்னும் அதிமுக- திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 200 தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக ஆட்சியை இழந்ததோடு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

AIADMK

அதுமட்டுமல்லாமல் இதுவரை அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் தோல்வியடையாத கட்சி என பெருமை கொண்ட அதிமுக, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிமுக

2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை அவர் தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல் கட்சிக்குள் எழுந்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் கடந்த சில வாரங்களாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதற்கான காரணங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி

மேலும் கட்சியில் இருக்கும் குறைகள், மாவட்ட அளவிலான பிரச்சனைகள், கட்சியை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமியும் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர், சேலம், சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 24ஆம் தேதி விழுப்புரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிவி சண்முகம்

இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய முகமாகவும் முன்னால் அமைச்சராக இருந்த மயிலம் எம்எல்ஏ சிவி சண்முகம் பங்கேற்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் இணைந்து அதிமுகவில் தனி அணியாக உருவாகினர். ஆனால் கட்சி தாவல் தடைச் சட்டத்தால் அந்த முயற்சிக்கு சிக்கல் எழுந்த நிலையில் இருவரும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை மீண்டும் ஏற்றனர்.

விழுப்புரம் அதிமுக

ஆனால் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு சிவி சண்முகத்திடம் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது வரை அந்த பதவியை வழங்கவில்லை. மேலும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1100 க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆதரவு யாருக்கு?

இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தை சிவி சண்முகம் புறக்கணித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க விழுப்புரம் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதே மாவட்டத்தில் இருந்து ஏராளமானூர் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் உண்மையில் விழுப்புரம் நிர்வாகிகளின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.

எஸ்.பி வேலுமணி

மேலும் கோவை நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை எஸ்பி வேலுமணி புறக்கணித்திருக்கும் நிலையில் சி.வி சண்முகம் எஸ்.பி வேலுமணியும் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்திருப்பதாக சொல்கின்றனர். அதாவது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டில் தாங்கள் தொடரலாம் எனவும். இல்லையேல் பாஜகவில் இணையலாம் என இருவரும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் ஆதரவு

ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்தால் தான் கட்சி தாவல் தடை சட்டம் பாயும். அதே நேரத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கடந்த ஆட்சி காலங்களில் திமுக அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களாக தேமுதிகவினர் செயல்பட்டது போல தாங்களும் செயல்பட திட்டமிட்டு இருப்பதாக சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+