சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யப்பா.. செம்ம கிரியேட்டிவிட்டி.. அசத்துதே அதிமுக.. செம ரீச்சாமே

அதிமுகவின் பிரச்சார விளம்பரங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், அதிமுக வெளியிடுள்ள விளம்பரங்கள் மற்றும் பிரச்சார பாடல்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

"வெற்றிநடை போடும் தமிழகம்" என்று தமிழக அரசு செய்த விளம்பரங்கள் மற்றும் "தொடரட்டும் வெற்றிநடை என்றென்றும் இரட்டை இலை" என்கிற அதிமுகவின் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அதிமுக அரசு செய்த நல்லாட்சியை எடுத்துக்காட்டும் வகையில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் வெளிவந்த பாடல் சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது பெருவாரியான மக்களை கவர்ந்துள்ளது.

நேத்துதான் ஸ்டாலின் சொன்னாரு, நேத்துதான் ஸ்டாலின் சொன்னாரு, "சிம்ம சொப்பனம்".. அதற்குள் செந்தில்பாலாஜி மீது பாய்ந்த குற்றபத்திரிகை

 வேற லெவல் ரீச்

வேற லெவல் ரீச்

அதிமுக விளம்பரத்திலும் எளிய மக்களின் முகங்களையும், அவர்கள் தேவைகளை அதிமுக அரசு பூர்த்தி செய்திருப்பதை காட்டுவது மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெண்கள் அந்த காணொளியில் அதிகளவில் இடம் பெற்றிருப்பதால், மகளிர் மத்தியில் வேற லெவல் ரீச் என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், மீனவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

திமுக

திமுக

மொபைல் காலர் டியூன் முதல் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ் வரை வெற்றி நடை போடும் தமிழகமே பாடலை மக்கள் வைத்திருப்பது அதன் ரீச்சை குறிக்கிறது. அதற்கு பிறகு வெளியிடப்பட்ட திமுகவின் விளம்பர பாடல் "ஸ்டாலின் தான் வராரு" சொல்லிகொள்ளும் அளவுக்கு ரீச் ஆகவில்லை, திமுக தலைவர் ஸ்டாலினை மட்டும் வளைத்து வளைத்து அந்த வீடியோவில் காட்டுவதால் அந்த பாடல் ஜனரஞ்சகமாக அமையவில்லை. அதனால் அதிமுகவின் பிரச்சார பாடல் போட்ட வெற்றிநடையை திமுக பாடல் போடவில்லை என்று அதிமுகவினர் சொல்கிறார்கள்.

 இரட்டை இலை

இரட்டை இலை

அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ பிரச்சார விளம்பரமாக வெளிவந்த "தொடரட்டும் வெற்றி நடை, என்றென்றும் இரட்டை இலை" என்ற பாடலும் மெகா ஹிட். அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களுக்கு புரியும் படி அப்படியே எளிய நடையில் விளம்பரமாக ஆக்கப்பட்டுள்ளது. விளம்பர வீடியோவில் எளிய மக்களின் சிரிப்பு, மகிழ்ச்சி, பேச்சு, அவர்களின் துன்பம் போன்றவை உண்மை தன்மை மாறாமல் காட்டப்பட்டதால் காணொளியை பார்க்கும் அனைவருக்கும் தங்களையே பார்ப்பது போல் உணர வைக்கிறது.

 தில்லுமுல்லு

தில்லுமுல்லு

மேலும், தில்லு முல்லு திமுக என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களும் அதன் நகைச்சுவையால் மக்கள் மத்தியில் நன்றாக சென்றடைந்துள்ளதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். விளம்பரங்களின் தரமும் திரைப்படம் போல் உள்ளதால் அவை கவர்ச்சிகரமாக உள்ளது.

English summary
AIADMK's campaign Advertisements are welcomed by the public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X