’அமரன்’ பார்த்து கண்கலங்கிய ஸ்டாலின்! ரியல் அமரனுக்காக கலங்கியவர் ஜெயலலிதா! இன்பதுரை என்ன சொன்னார்?
சென்னை: காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சென்னை ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' திரைப்படமாக வெளி வந்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து கண்கலங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில்
ரீலை பார்த்து அல்ல ரியலுக்காக கண்கலங்கி துணை நின்றவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என கூறியுள்ளார் அதிமுக வழக்கறிஞரான இன்பதுரை.
இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன், மேஜராக உயர்ந்தார்.

தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்கு உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்ட்ரிய ரைபிள் குழுவில் இணைந்தார். தொடர்ந்து பல சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களை நிகழ்த்தியிருக்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன்.
2013இல் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அல்தாப் பாபாவை சுட்டு வீழ்த்தும் குழுவில் முக்கிய பொறுப்பாற்றி இருந்தார். அதற்கு முன்னதாக லெபனான் சென்ற ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையிலும் பணியாற்றியவர் தான் மேஜர் முகுந்த் வரதராஜன். ஏப்ரல் 2014 இல் காஷ்மீரில் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார். தொடர்ந்து முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசின் மிக உயர்ந்த அமைதி கால வீர விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் அப்போதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருதை அவரது மனைவி இந்து ரபேக்கா வர்கீஸ் இடம் வழங்கினார். தற்போது இந்த சம்பவங்கள் தான் அமரன் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளி வந்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் கவர்ந்து படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது இந்த நிலையில் இந்த படத்தை கமலஹாசனின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர். ரிலீசுக்கு முன்னதாகவே இருவரும் இந்த படத்தை பார்த்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோரை பாராட்டினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் டச்சிங்காக இருந்ததாகவும் கண்கள் கலங்கி விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கமலஹாசனிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது அழைப்பின் பேரில் படத்தை பார்த்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரீல் அமரனுக்காக இல்லாமல் ரியல் அமரனுக்காக கண்கலங்கியவர் ஜெயலலிதா எனக் கூறியிருக்கிறார் அதிமுக வழக்கறிஞரான இன்பதுரை.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்து, இறுதி மரியாதை செலுத்த அமைச்சர் சின்னையாவை நேரில் அனுப்பி, பின்பு ரூ.12 லட்சம் பணமுடிப்பை வழங்கி, ரீலை பார்த்து அல்ல ரியலுக்காக கண்கலங்கி துணை நின்றவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா" என பதிவிட்டுள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்த போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது மரணத்திற்கு அரசு மரியாதை கொடுத்ததோடு, நிதியுதவியும் அளித்திருந்தார். மேலும் அப்போதைய அமைச்சர் சின்னையாவை அனுப்பி அரசு சார்பில் மரியாதையும் அளித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்," ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியிருந்தார். இதனை குறிப்பிட்டுதான் இன்பதுரை இவ்வாறு கூறியுள்ளார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications