Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கமல் ஹாசன்.. நமது அம்மா நாளிதழில் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்திருப்பதை விமர்சித்துள்ள அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவாரா என்று சந்தேகம் தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது கிராமசபை நடத்தியதை விமர்சித்துள்ள நமது அம்மா, கமல் ஹாசன், கிராமசபை கூட்டத்தை நடத்துவதாக ஏக பில்டப்போடு அரசியல் கட்சி தொடங்கியதாவும், யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதல்வர் நாற்காலியை அவர் கணக்கு போட்டுவிட்டதாகவும் விமர்சித்துள்ளது.

aiadmk s namadhu amma attacks kamal haasan, It is doubtful that Kamal haasan will holding the party

உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துவிட்டு பின்னங்கால் பிடரியில்பட கமல்ஹாசன் ஒடுவதாக விமர்சித்துள்ள நமது அம்மா நாளேடு, அடுத்தவர் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் எதிர்காலத்தில் நடத்துவது ஐயம் தான் என்பதை உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துவதாகவும் நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+