எங்க ஏரியாக்கு வாங்க எடப்பாடி! போட்டி போட்டு விருப்பமனு வாங்கிய அதிமுக ர.ர.க்கள்! வருமானம் இவ்வளவா?
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக, நேற்று ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 349 பேர், தங்கள் தொகுதியில் பழனிசாமி போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி 888 பேரும் விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கான விருப்ப மனு விநியோகத்தை கட்சி தொடங்கியுள்ளது.

அதிமுக விருப்ப மனு
இந்த நிகழ்ச்சியை அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பா. வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று முழுவதும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
ராயப்பேட்டை அதிமுக அலுவலகம்
தமிழகத்தில் உள்ள பொதுத் தொகுதிகள் மற்றும் தனித் தொகுதிகளுக்கு விருப்ப மனு பெற ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கான விருப்ப மனுக்கள் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி வழங்கப்பட்டன. விருப்ப மனு விநியோகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், பூர்த்தி செய்த மனுக்களையும் அதே நேரத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் கட்சி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் 23-ஆம் தேதி வரை தொடரும்.
அதிமுக வேட்பாளர் தேர்வு
விருப்ப மனுவில் மொத்தம் 25 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதில், எந்த ஆண்டிலிருந்து அதிமுக உறுப்பினராக உள்ளீர்கள், கட்சியில் தற்போது வகிக்கும் பொறுப்பு, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரளமாக பேசத் தெரிந்த பிற மொழிகள், தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறித்த மதிப்பீடு, கட்சி வளர்ச்சிக்காக செய்த பணிகள், கட்சி போராட்டங்களில் சிறை சென்ற விவரம், நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்ற தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
இதனிடையே, பெறப்பட்ட 1,237 விருப்ப மனுக்களில் 349 பேர் தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மீதமுள்ள 888 பேர் தங்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளனர். இது, வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்குள் போட்டி மற்றும் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அதிமுக வருமானம்
மொத்தத்தில், விருப்ப மனு விநியோகம் தொடங்கிய முதல் நாளே ஏற்பட்ட இந்தப் பெரும் வரவேற்பு, 2026 தேர்தலை அதிமுக தீவிரமாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. முதல் நாளில் 1,237 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவுக்கு 1 கோடியே 85 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications