முதல்வரை ஓடிப்போய் சந்தித்தது எல்லாம் வீணா போச்சே.. ஏமாற்றத்தில் வைத்திலிங்கம்!
Recommended Video
சென்னை: அதிமுகவின் மத்திய அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பதில் சில தினங்களாக இருந்த சிக்கல் இப்போது தீர்ந்துள்ளது. மத்திய அமைச்சராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மகனுக்கு சீட் தந்துள்ளது பாஜக! இதையடுத்து அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதி வேட்பாளர் ஓபி ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். எனினும் அதிமுகவில் மத்திய அமைச்சர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள், குழப்பங்கள் நடந்து வந்தன.
தமிழகத்திலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டுமே முதல் கட்ட அமைச்சரவையில் பதவி கிடைக்கும் எனவும் அதுவும் இணை அமைச்சர் பதவியாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் பிடிவாதம்
ஆனால் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அதிமுக சறுக்கி விழ, தேனியில் மட்டும் அபார வெற்றியை பெற்றுள்ளதால் தன் மகனுக்கு எப்படியேனும் அமைச்சர் பதவியை தந்தே ஆக வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டு வந்தார்.

பாஜக தலைமை
இதனை கட்சியில் உள்ள சீனியர்களோ ஏற்கவே இல்லை. குறிப்பாக, கட்சியின் அனுபவஸ்தர், வைத்திலிங்கத்துக்குதான் மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என எடப்பாடியை அணுகி எடுத்து சொன்னார்கள். எடப்பாடியும் மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையை பாஜக தலைமையிடம் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்.

எடப்பாடியுடன் சந்திப்பு
இதனால், ஒருவேளை சீனியர் நபர் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி தரப்படுமானால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் வர ஆரம்பித்தன. இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வைத்திலிங்கம் திடீரென நேற்று மாலை நேரில் சென்று சந்தித்து பேசினார். மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், வைத்திலிங்கம், முதல்வரை சென்று சந்தித்தது வலம் வந்த யூகங்களை ஏறத்தாழ உறுதி செய்தது.

விசுவாசி
இதனிடையே, வைத்திலிங்கம் மத்திய அமைச்சராக நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில் ஜெயலலிதா இருந்தபோது, கட்சி விசுவாசிகளில் முக்கியமானவர் வைத்திலிங்கம் என்பதால்தான். ஆனால் ஓபிஎஸ் விடவில்லை போல தெரிகிறது. எப்படியோ நெருக்கி தள்ளி மகனுக்கு சீட் வாங்கி விட்டார். இதனால் வைத்திலிங்கம் தரப்பு கடும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தில் உள்ளனர்!
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications