Exclusive: ஓபிஎஸ் - செங்கோட்டையன் ரகசிய டீல்.. பின்னணியில் டெல்லி சிக்னல்.. நாஞ்சில் கோலப்பன் பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் ரகசிய டீல் போட்டிருக்கிறார்கள். டெல்லி ஆதரவுடன் விரைவில் சம்பவம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்" என அதிர்ச்சி வெடிகளை கொளுத்திப் போடுகிறார் நாஞ்சில் கோலப்பன். நமக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி இங்கே..

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார். இதன் மூலம் எப்படியாவது ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்துவிடுவார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க ஒருபோதும் வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

AIADMK Edappadi palaniswami O Panneerselvam

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் அமைப்புச் செயலாளருமான நாஞ்சில் கோலப்பன், நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது, அதிமுகவின் எதிர்காலம், பாஜக தலைமையின் திட்டங்கள், ஓபிஎஸ் முயற்சிகள் குறித்துப் பேசியுள்ளார்.

நாஞ்சில் கோலப்பன் பேட்டி

நாஞ்சில் கோலப்பன் பேசுகையில்,"அதிமுக கொறடா நியமனம் உள்ளிட்டவற்றுக்கு ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டவர். கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்படுவது மரபு அல்ல. கட்சியை கஷ்டப்பட்டு ஒருங்கிணைத்தவர் ஓபிஎஸ். அவர் அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை என்றால் இன்றைக்கு கட்சி ஓபிஎஸ் தலைமையில் தான் இருந்திருக்கும்.

தன்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர் வசனத்தை இவர் சொல்லும்போது எங்களுக்கு பற்றிக்கொண்டு எரிகிறது. ஈரக்குலை பதறுகிறது. நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அனைவருக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி.

AIADMK Edappadi palaniswami O Panneerselvam

செங்கோட்டையன் - ஓபிஎஸ் டீல்

செங்கோட்டையன், ஓபிஎஸ் அண்ணன் - தம்பி உறவோடு தான் பழகிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதே போக்கில் போவதில் செங்கோட்டையனுக்கு விருப்பம் கிடையாது. அனுபவம் மிக்கவர், அமைதியாக காய்நகர்த்த நினைக்கிறார்.

ஜெயலலிதாவால் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டவர் ஓபிஎஸ். இன்றைக்கு அவரை பின் வரிசைக்கு அனுப்பி இருக்கிறார்கள் எடப்பாடி வகையறா. எடப்பாடி இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இல்லையென்றால் அவைக்கு வருவாரா? ஆனால், தன்னை நம்பி வாக்களித்த போடி தொகுதி மக்களுக்காக தினமும் சட்டசபைக்கு போகிறார் ஓபிஎஸ். மக்களுக்காக கேள்வி கேட்கிறார்.

நெஞ்சுரம் கொண்டவர் ஓபிஎஸ். அவ்வளவு பெரிய பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டியபோது சிங்கம் போல போய் நின்றார் இல்லையா? எடப்பாடி பழனிசாமி இல்லாமல் ஒரு அதிமுக உருவாகும். எடப்பாடி பழனிசாமியே 2026ல் ஜெயிப்பாரா என்பது தெரியாது.

அதிமுகவில் குழப்பம்

தளவாய் சுந்தரம், இப்போது மாவட்டத்தில் சரியாக கட்சிப் பணி செய்வதில்லை. இப்போது எதிர்த்தால் எம்.எல்.ஏ பதவியை பறிக்க நினைப்பார் எடப்பாடி. ஏற்கனவே 23 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோக காரணமாக இருந்தவர் எடப்பாடி. எனவே மக்கள் பணிக்காக எல்லோரும் அமைதி காக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலுக்கு 4 மாதங்கள் முன்பாக ஆங்காங்கே குழப்பங்கள் வெடிக்கும். பலர் குரல் எழுப்புவார்கள்.

செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், எஸ்பி வேலுமணி, தங்கமணி என கிளம்பி வருவார்கள். எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். ஓபிஎஸ் தலைமையில் அதிமுக அமைவதைத்தான் தொண்டர்கள் விரும்புவார்கள். கட்சி விதிகளை நீதிமன்றம் முறையாகப் பார்த்தாலே சின்னமும், கட்சியும் ஓபிஎஸ் வசம் வந்துவிடும்.

டெல்லி சப்போர்ட்

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகப்போவது எப்படி என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. டெல்லி ஆதரவு, தேர்தல் கமிஷன் முடிவு அதற்கு கைகொடுக்கும். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ஜெயக்குமார், முனுசாமி போன்றவர்கள் கட்சியை விட்டு போவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+