Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமே நம்மதான்.. மண்ணை அள்ளி போட்ட எடப்பாடி? கூட்டி, கழித்தும் சரியாகாத பாஜக கணக்கு! 2026ல் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பும் குழப்பமும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக கூட்டணி குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார் என்ற அதிமுகவின் தீர்மானம், பாஜகவுக்கு கொடுக்கப்பட்ட சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் சேரலாம் என நினைத்திருந்த டிடிவி, ஓபிஎஸ்க்கு வைக்கப்பட்ட செக் என்கின்றனர் அதிமுகவினர்.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதே, பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டது அரசியல் ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட பின்னர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி.

edappadi palanisamy AIADMK bjp

2026 சட்டமன்ற தேர்தல்

திடீரென அதே பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனாலும், இந்தக் கூட்டணியில் இன்னமும் வெளிப்படையான நிச்சயமின்மை இருப்பதாக அதிமுகவின் ஒரு பகுதி தலைவர்களும், தொண்டர்களும் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக, பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தொடர்ந்து "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று கூறிவந்தாலும், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருமுறையாவது வெளிப்படையாக அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணி முடிவு

இந்தப் பின்னணியில்தான், டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், "2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை; கூட்டணியில் யாரை இணைப்பது என்பது குறித்த முழு அதிகாரமும் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கே" என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவதற்கு உறுதியேற்போம்" என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதால், கூட்டணியில் இறுதி முடிவுகளை எடுப்பவர் இபிஎஸ் மட்டுமே என்ற செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

எடப்பாடி பழனிசாமி

இது பாஜகவுக்கும், அதிமுகவிலிருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்கும் விடுக்கப்பட்ட ஒரு அரசியல் செய்தி என்றும் கருதப்படுகிறது. அதேசமயம், பொதுக்குழுவில் பேசிய இபிஎஸ், "நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்" என்று கூறியதும், "210 இடங்களில் கூட்டணி வெற்றி பெறும்; அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" என்ற அவரது பேச்சும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூட்டணியின் நிலை குறித்து மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்த சூழலில்தான், அதிமுக தீர்மானங்களுக்குப் பிறகு மறுநாளே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பதும், தொடர்ந்து டெல்லியில் ஆலோசனைகள் நடந்து வருவதும் கவனிக்கத்தக்கது. ஒருபுறம் அதிமுக, மறுபுறம் திமுக கூட்டணி, தனித்த அணியாக நாம் தமிழர் கட்சி, புதிய அரசியல் சக்தியாக தவெக எனப் பல அணிகள் உருவாகும் சூழலில், 2026 தேர்தல் நான்கு அல்லது ஐந்து முனைப் போட்டியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு

இறுதியில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், கூட்டணியில் யார் யார் வருவார்கள்? யாருக்கு எவ்வளவு தொகுதிகள்? பிற கட்சிகள் சேர்வது எப்போது? என்ற கேள்விகளுக்கு உடனடி பதில் தரவில்லை என்றாலும், அரசியல் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இன்னும் சில வாரங்களில், இந்தக் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+