மிஷன் அதிமுக.. மீண்டும் கையில் எடுக்கும் எஸ்பி வேலுமணி.. பாஜக ஆதரவுடன் நடக்கப்போகும் சம்பவம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அதிருப்தியில் இருக்கும் எஸ்பி வேலுமணி தரப்பு நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிமுக தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைமையை அணுகி வந்தனர். இதனால் பாஜக ஆதரவுடன் எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுகவை கைப்பற்றுகிறதா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். சத்தியபாமா தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்ட தாராபுரம் தொகுதியிலும் கூட, தவெக சுமார் 10 ஆயிரம் வாக்குகளில் வென்றுள்ளது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

AIADMK SP Velumani Edappadi Palaniswami

இருப்பினும் தவெக வெற்றிக்கு பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவினரை தவெகவுக்கு அழைக்கிறோம் என்று நேரடியாக ஆதவ் அர்ஜுனா அழைத்திருக்கிறார். அதிமுகவின் கிளைச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிமுகவின் கட்டமைப்பை முழுமையாக தனதாக்கி கொள்ள தவெக தயாராகி வருவதாக தெரிகிறது. இதனிடையே தவெக ஆட்சி அமைத்த உடன் அதிமுகவில் ஒரு மிஷனை செயல்படுத்த திட்டமிட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் ஆக்ரோஷமான அணுகுமுறையால் உடனடியாக அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.

தற்போது இடைத்தேர்தலில் தவெக வென்றுள்ள சூழலில், மீண்டும் அப்படியொரு மிஷனை செயல்படுத்த தவெக தயாராகி வருவதாக தெரிகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் நாளை மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிமுகவில் இருந்து 3ல் 2 பங்கு எம்எல்ஏ-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை 47 எம்எல்ஏ-க்களில் 32 பேரின் ஆதரவு தேவையாக இருந்தது. ஆனால் 25 பேர் மட்டுமே எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

தற்போது அதிமுகவில் 41 எம்எல்ஏ-க்கள் இருக்கும் சூழலில், 3ல் 2 பங்கு எம்எல்ஏ-க்கள் என்றால், சுமார் 27 எம்எல்ஏ-க்கள் எஸ்பி வேலுமணி பக்கம் வர வேண்டும். அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த முயற்சி தோல்வி அடைந்த சூழலில், இம்முறை எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரால் சரியாக செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல் கடந்த சில மாதங்களாகவே அதிமுக - பாஜக இடையிலான உறவில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பாஜகவை அணுகி அதிமுக தலைமையை மாற்ற கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி வந்தது. இதனால் பாஜக ஆதரவுடன் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி அதிமுகவை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்பிப்பாரா என்ற விவாதமும் தீவிரம் அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+