கோடி கோடியாய் இறக்கியும்.. எந்த பலனும் இல்ல? 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு இத்தனை கோடி செலவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இருந்த போதும் அந்த தேர்தலில் அதிமுக சுமார் 109 கோடியை சட்டமன்ற தேர்தலுக்காக செலவு செய்துள்ளது. பிரச்சாரம், விளம்பரம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக முழுவதும் நடந்தது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த நிலையில் ஆளுங் கட்சியாக இருந்த திமுக எதிர்க் கட்சியானது.

AIADMK

எதிர்க் கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட நிலையில் அதிமுக மட்டும் வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தலுக்காக அதிமுக எவ்வளவு செலவு செய்தது என தேர்தல் ஆணையத்தில் அறிக்கை அளித்து இருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.

2026 சட்டசபை தேர்தல்

அந்த வகையில் 109 கோடியே 61 லட்சத்து 81 ஆயிரத்து 982 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். அந்த செலவு கணக்கில் விளம்பரத்துக்காக மட்டும் 103 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் செலவு

அதாவது நாளிதழ்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூக வலைதள பிரச்சாரம் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு 103 கோடியே 98 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக 1 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நட்சத்திர பேச்சாளர் உள்ளிட்ட பிரச்சாரகர்களுக்கு 17 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக மட்டும் 1.75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவரது வாகனத்துக்கு 4 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போடப்பட்டுள்ளது.

அதிமுக நிதி

அது மட்டுமல்லாமல் வேட்பாளர்களுக்கான ஆவணங்கள் தயாரிப்பு படிவங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுகவின் நிதி நிலவரம் குறித்த தகவலும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது அதிமுகவின் ஒட்டுமொத்த கையிருப்பு நிதியாக 296 கோடி ரூபாய் இருக்கிறது. கரூர் வைசியா வங்கியில் மட்டும் 271 கோடி ரூபாய் இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+