போச்சு.. உடைந்தது அதிமுக! எடப்பாடி Vs சண்முகம்! 2 டீம்.. சட்டசபையில் வெட்ட வெளிச்சமான உண்மை!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அதிமுக இரண்டாக உடைய சூழல் இருப்பதாக பேசப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் நிகழ்வு ஒன்று சட்டசபையில் அரங்கேறி இருக்கிறது. இன்று 17வது சட்டசபையில் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி தலைமையிலும், சிவி சண்முகம் தலைமையிலும் தனித்தனியாக சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அதிமுக உடைந்தது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களிலும், அதிமுக வெறும் 47 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது.
பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட் கூட இழந்தது கட்சித் தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என தொடர்ந்து 11 தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சியின் எதிர்காலம் குறித்து அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சிவி சண்முகம்
மற்றொரு பக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற யோசனையும் அதிமுகவுக்குள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஆதரவு தனக்கு இருப்பதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என உறுதி செய்திருக்கும் சண்முகம், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டசபை குழு தலைவராக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.
அதிமுக பிளவு
ஆனால் இவை அனைத்தும் யூகங்களாகவே இருந்தன. அதிகாரப்பூர்வமாக அதிமுகவோ அல்லது வேறு நிர்வாகிகளோ இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் பிளவு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் விஜய் முறைப்படி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் முறைப்படி பதவி ஏற்று கொண்டனர்.
அதிமுக எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் சட்டசபைக்கு எடப்பாடி தலைமையில் கேபி முனுசாமி உள்ளிட்ட சிலர் வந்தனர். சிறிது நேரம் கழித்து சி.வி சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வந்தனர். வழக்கமாக எடப்பாடி பழனிச்சாமி வரும்போதுதான் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அவர் தலைமையில் வருவார்கள். ஆனால் எடப்பாடி ஒரு டீம் ஆகவும், சிவி சண்முகம் ஒரு டீம் ஆகவும் சட்டசபைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பது உறுதி தான் என்கின்றனர். மேலும் இன்றைய கூட்டத்தொடரிலேயே சிவி சண்முகம் எடப்பாடிக்கு எதிராக பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications